இலங்கையில் கடந்த 27ம் திகதி டித்வா புயல் ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் சுமார் 175,000 ஹெக்டேயர் பயிர் நிலங்கள் அழிந்துள்ளதால் எதிர் காலத்தில் உணவுக்கு நெருக்கடி நிலை ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
- நுவரெலியாவில் அதிகபட்சமாக சுமார் 1,046 ஹெக்டேயர் காய்கறி பயிர் இழப்பு பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து பதுளையில் 930 ஹெக்டேர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
- அனுராதபுரம் (671 ஹெக்டேர்), குருநாகல் (508 ஹெக்டேர்), திருகோணமலை (498 ஹெக்டேர்), மட்டக்களப்பு (454 ஹெக்டேர்) மற்றும் புத்தளம் (430 ஹெக்டேர்) ஆகிய மாவட்டங்களில் காய்கறி சாகுபடி 7,000 முதல் 8,000 ஹெக்டேர் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- பருப்பு வகைகள், சோளம், மிளகாய் மற்றும் இதே போன்ற பயிர்களும் சேதமடைந்துள்ளன, இதில் அனுராதபுரம் சுமார் 3,478 ஹெக்டேர் பரப்பளவில் அதிக பாதிப்புக்குள்ளானது, அதைத் தொடர்ந்து வவுனியா 2,747 ஹெக்டேர் பரப்பளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
- செயற்கைக்கோள்களிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகள், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்கள் அதிக அளவில் வெள்ளத்தில் மூழ்கியதாகக் குறிப்பிடப்படுகின்றன.
மேலும் இலங்கையில் சுமார் 2.3 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்களில், 175,000 ஹெக்டேயர் அல்லது 7.6 சதவீத நிலம் சேதமடைந்துள்ளதாக, சமீபத்திய சூறாவளி காரணமாக அறுவடை, உற்பத்தி அளவுகளில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், உள்ளூர் உணவுக்கான விலை உயர்வு அதிகரித்துள்ளதாகவும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலங்கள் உடனடியாக மீண்டும் பயிரிடப்படாவிட்டால், இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மேலும் மோசமடையும் நிலை ஏற்படலாம் என கவலைகள் எழுந்துள்ளது.
வெள்ளத்தால் அதிக அளவில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 36,188 ஹெக்டேர் நெல் சாகுபடியும், அதைத் தொடர்ந்து திருகோணமலையில் 22,155 ஹெக்டேர் நெல் சாகுபடியும், அனுராதபுரத்தில் 15,237 ஹெக்டேர் நெல் சாகுபடியும் அழிவடந்துள்ளதாக தரவுகள் பதிவாகியுள்ளன.
அதே போல் மன்னார் (11,570 ஹெக்டேர்) மற்றும் குருநாகல் (10,775 ஹெக்டேர்) ஆகிய இடங்களிலும் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மொத்தம் சுமார் 140,000 முதல் 150,000 ஹெக்டேர் நெல் சாகுபடி அழிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரம் காய்கறி சாகுபடிக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலங்களும் அழிக்கப்பட்டுள்ளன, நுவரெலியாவில் சுமார் 1,046 ஹெக்டேர் காய்கறி பயிர் இழப்பு அதிகமாக பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து பதுளையில் 930 ஹெக்டேர் சேதம் ஏற்பட்டுள்ளது. அனுராதபுரம் (671 ஹெக்டேர்), குருநாகல் (508 ஹெக்டேர்), திருகோணமலை (498 ஹெக்டேர்), மட்டக்களப்பு (454 ஹெக்டேர்) மற்றும் புத்தளம் (430 ஹெக்டேர்) உள்ளிட்ட குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் உள்ளன.
செயற்கைக்கோள்களிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளின்படி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்கள் அதிக அளவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, வெள்ளத்தின் அளவு 13 முதல் 16 சதவீதம் வரை இருந்துள்ளது.
UNDP தரவுகளின்படி, பயிர்கள் அழிக்கப்பட்டு, உபகரணங்கள் சேதமடைந்ததால், கடன் பெற்று பயிர்ச் செய்கையில் ஈடுபடும் கிராமப்புர விவசாயக் குடும்பங்கள் இப்போது அந்தக்கடனைத் திருப்பிச் செலுத்த வழியின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.



