ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்காக சுற்றுலா விசாவில் நுழைந்த 17 இலங்கையர்கள்

வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வருகை தரு (சுற்றுலா) விசாவில் அபுதாபிக்குள் நுழைந்த 17 இலங்கைப் பிரஜைகள் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் சமீபத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து தெரியப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக காவல்துறையினர் மற்றும் தூதரகப் பிரதிநிதிகளால் 17 இலங்கையர்கள் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

தூதரக ஊழியர்கள் மற்றும் காவல்துறை  அதிகாரிகளின் விசாரணைகளின் பின்னர், தங்களுக்கு எந்த பிரச்சினையும் அல்லது புகார்களும் இல்லை எனக் கூறி இலங்கையர்கள் அறிவிப்புகளை வெளியிட்டனர்.

அவர்களில் ஒருவர் இலங்கைக்கு திரும்ப ஒப்புக்கொண்டதையடுத்து, தூதரகம் அவரை திருப்பி அனுப்பியது. இருப்பினும், சரியான சட்ட மற்றும் குடியேற்ற நடைமுறைகளை கடைப்பிடிக்க தூதரகத்தின் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும் கடந்த நவம்பர் 15ஆம் திகதி ஏனையவர்கள் ஓமானுக்கு புறப்பட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.