இலங்கையில் 147 வெளிநாட்டவர்கள் கைது!

இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147  வெளி நாட்டுப் பிரஜைகளை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் சிலாபம் இரணவில பகுதியில் உள்ள  விடுதிகளில் தங்கியிருந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்கள் கைதாகியுள்ளனர்.

சீனா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் சீனாவைச் சேர்ந்த 133 பேரும், வியட்நாமை சேர்ந்த ஒருவரும், பங்களாதேஷை சேர்ந்த 13 பேரும் அடங்குவதாக  காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.