கொரோனாவின் ஒமிக்ரான் திரிபால் 23 இந்திய மாநிலங்களில் கோவிட் தொற்று பரவியுள்ளது . இதனால் இதுவரை 1431 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 454 பேருக்கும், டெல்லியில் 351 பேருக்கும் ஒமிக்ரான் தொற்றியுள்ளது என்று இந்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்ததாக தமிழ்நாடு, குஜராத், கேரளா ஆகிய மாநிலங்களில் முறையே 118, 115, 109 பேருக்கு ஒமிக்ரான் உள்ளது.