1357 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் தகவல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 1357பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் இரண்டாவது நாள் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

IMG 7878 1357 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் தகவல்

இன்றைய தினம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் தொற்றாளர் அதிகமாகவுள்ள பகுதி மக்களுக்கு  தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கல்லடி,விபுலானந்தா வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இந்த பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இன்றைய தினம் 60வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களுக்கு இங்கு இன்று தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply