13 ஏ திருத்தச் சட்டம்- இதில் ஈழத்தமிழருக்கு ஏதாவது இருக்கிறதா? ஏன் இந்தியா வலியுறுத்துகிறது?

510 Views

இந்திய இலங்கை ஒப்பந்தமும் 13 ஏ திருத்தச்சட்மும் 30 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்டவை. அதனை அடிப்படையாகக் கொண்டே இந்திய இராணுவம் சிறீலங்காவில் கால் பதித்திருந்தது. இந்தியாவின் படை நடவடிக்கை தோல்வியில் முடிந்தபோதும், 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு இந்தியா தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் நிறைவடைந்த பின்னர் இந்த உடன்பாடு குறித்து மேலும் பல விவாதங்கள் தோற்றம் பெற்றுள்ளன. இந்த திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கு என்ன நன்மையை பெற்றுத் தரும், அதனால் இந்தியாவுக்கு என்ன நன்மை கிடைக்கும்? என்பதை இலகுவாக் புரிந்து கொள்வதற்காக சில விபரங்களை சுருக்கமாகப் பார்ப்பது இங்கு பொருத்தமானது.

இந்த விபரங்களை யாழ்பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

13ஏ இன் கீழ் மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்கள்.

•மாகாண சபைக்கு நிலம் சார்ந்த எதுவித அதிகாரமும் இல்லை.

•நிதி,பணிக்கு அமர்த்துதல், பணியிலிருந்து நீக்குதல், பணிசெய்வோர், அவர்களின் ஒழுக்காற்கு நடவடிக்கைகளுக்கான முழு அதிகாரமும் லங்கா அரசுக்கும் அதன் பிரதிநிதியான கவர்னருக்குமே உண்டு.

•2014 இல் “வட மாகாண முதலமைச்சர் நிதி” என்று ஒன்றை உருவாக்க முன்மொழியப்பட்டதை ஆளுநர் நிராகரித்தார்.

1987 இல் இந்திய பிரதமருக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி 13ஏ பற்றி எழுதிய கடிதத்தில்

•இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் சொல்லியிருப்பது போல, இந்திய அரசுடனும் தமிழர் விடுதலைக் கூட்டணி உடனும் கலந்துரையாடி 13ஏ திருத்தம் உருவாக்கப்படவில்லை.

• 13ஏ இல் தமிழருக்காக எதுவுமில்லை.

இந்திய இலங்கை ஒப்பந்தம் மற்றும் 13ஏ திருத்தத்தில் வடக்கும் கிழக்கும் இணைத்தல்

•வட-கிழக்கு வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்களின் வாழிடங்கள் என்று இந்திய இலங்கை ஒப்பந்தம் கூறுகின்றது.

•வட-கிழக்கு இணைத்தல் அங்கு எடுக்கப்படும் கருத்து கணிப்பு ஊடாக செய்யப்பட வேண்டும் என்கிறது இந்திய இலங்கை ஒப்பந்தம்.

•13ஏ திருத்தம் இந்த விடயத்தை பற்றி பேசவில்லை. நாடாளுமன்றத்தில் முடிவு எடுத்து இரண்டு மாவட்டங்களையும் ஒரு நிர்வாகத்தின் கீழ் தற்காலிகமாக கொண்டு வரலாம் என்று மட்டுமே சொல்கிறது. ஆக 13ஏ திருத்தம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மீறிவிட்டது. அவசரகால சட்டத்தின் கீழ் இரு மாவட்டங்களையும் இணைத்தது சட்ட மீறல் என்று 2007 இல் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

13ஏ திருத்தம் பற்றி இலங்கை என்ன சொல்கிறது.

•ஒற்றையாட்சி அரசில்இ 13ஏ அதியுச்சமான அதிகார பகிர்வு என்று 1987 இல் இலங்கை உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

•அப்படியானால் ஒற்றையாட்சி அரசின் கீழ் 13ஏ பிளஸ் பற்றி பேசுவது ஏமாற்றுவதல்லவா?

•ஒற்றையாட்சி அரச சாசனத்தை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை ஆதரவும் ஒட்டுமொத்த தீவின் கருத்துகணிப்பில் வெற்றியும் தேவை.

13ஏ இன்றும் அன்றும்

•எந்தவொரு இலங்கை அரசுடனான பேச்சு வார்த்தையிலும் 13ஏ தொடக்கப்புள்ளியாக இருந்ததில்லை.

•2009 பின்னரே இது மீண்டும் முன்னுக்கு வருகிறது.

•இதிலுள்ள எல்லா குறையபடுகளையும் தாண்டிஇ இலங்கை உச்சநீதிமன்றம் இது கடைசிப்புள்ளி என்று தீர்ப்பளித்த பின்னர் இது எப்படி தொடக்கப்புள்ளியாக இருக்கலாம்.

இந்தியா எதற்காக 13ஏ ஐ விரும்புகிறது

•இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்தியாவுக்கு சாதகமானது. அதன் பின்னிணைப்பில் இந்தியாவின் நன்மைக்கு எதிரான எந்தவோரு பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் சிறிலங்கா அரசு இணைய முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply