இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சுகளுக்கான  செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் 15  அமைச்சுகளுக்கான  செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) புதிய செயலாளர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதமரின் செயலாளர், அமைச்சின் செயலாளர் உட்பட 15 அமைச்சுக்களின் செயலாளர்கள் வருமாறு,

பிரதமரின் செயலாளர் -சபுநந்திரி

அமைச்சரவை செயலாளர் – எம்.டி.ஜே. பெர்னான்டோ,

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் – டி.எஸ்.ருவன் சந்திர,

நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கைத் திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் – கே.எம்.எம். சிறிவர்தன,

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் – அருணி  விஜேவர்தன,

கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சின் செயலாளர் – டி.ஜயசுந்தர,

மகளிர் , சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம்,மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் – கே. மகேஷன்,

வர்த்தகம், வாணிப, உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும்  முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு – எம்.எம். தய்முதீன்

கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் – எம்.பி அதபத்து,

சுகாதார அமைச்சின் செயலாளர் -பாலித குணரத்ன மஹிபால,

நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,  மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் செயலாளர் – பி.பி. யசரத்ன,

சுற்றாடல்,  வனஜீவராசிகள், வள வனங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டத்துறை  மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் – பிரபாத் சந்திரகீர்த்தி,

கமத்தொழில், காணி, கால்நடை, நீர்ப்பாசனம்,  கடற்றொழில்,மற்றும் உயிர் பல்வகைமை வளங்கள் அமைச்சின் செயலாளர் – எம். விக்கிரமசிங்க,

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் – சம்பத் துய்யகொன்ன

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் – ஆர்.பி செனவிரத்ன,

புத்தசாசனம், மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் – ரஞ்சித் ஆரியரத்ன,

சக்தி வலு அமைச்சின் செயலாளர் – உதயங்க ஹேமபால