நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, களுத்துறை, காலி, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 112 குடும்பங்களைச் சேர்ந்த 369 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக ஒருவர் உயிரிழந்தும் உள்ளதுடன், 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதேவளை, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.