உலக உணவுத் திட்டத்தின் (WFP) அனுசரணையுடன் வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொதி வழங்கி வைக்கும் நிகழ்வானது நேற்று (16) வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட ஈச்சிலம்பற்று கிராம சேவகர் பிரிவில் 164 பயனாளிகளுக்கும் பூமரத்தடிச்சேனை கிராமசேவகர் பிரிவில் 285 பயனாளிகளுக்கும் மற்றும் பூநகர் கிராம சேவகர் பிரிவில் 502 பயனாளிகளுக்கும் தலா 20kg துவரம் பருப்பு மற்றும் 5 லீற்றர் சமையல் எண்ணெய் என்பன வழங்கி வைக்கப்பட்டது.