ஈழத்தின் ஹாஷா குறுநிலப்பரப்பாக யாழ் தீபகர்ப்பம்

இஸ்ரேலில் இருந்த தத்துவார்த்த யூதம் வேறு, இப்போது இருக்கும் ஷியோனிஷ யூதம் வேறு! யூத இனத்தின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும் நிலமாக பலஸ்தீனம் இருக்கின்றது.

ஈழத்தில் வடக்கு கிழக்கில் இருந்த பெளத்தம் பிரிவு வேறு, இன்று ஆக்கிரமிக்கும் பெளத்தம் வேறு. பெளத்தத்தின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும் நிலமாக ஈழம் இருக்கின்றது.

ஈழத்திலும் எமது கடல் ஆக்கிமிக்கப்பட்டுகின்றது, வழிபாட்டிடங்கள் பறிக்கப்படுகின்றன. மேச்சல் தரைவைகள் பறிக்கப்படுகின்றன. வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்கின்றன. ஈழமும் துண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தந்திரோபாயங்களின் அடிப்படையிலும், ஆக்கிரமிப்புக்களின் அடிப்படையிலும் இஸ்ரேலும் ஶ்ரீ லங்காவும் பயணிக்கும் தடங்கள் ஒன்றே! இனவழிப்பை நிகழ்த்திக் கொண்டு பேசும் நியாயப்பாடுகளும் ஒன்றே!

இரண்டு தேசங்களும் பிராந்திய அமைவிடங்களினால் பிரித்தானியர்கள் காழ்கோளிட்டு உருவாக்கி பிரளயங்களையே அனுபவிக்கின்றன!

பிரித்தானியர்கள் விட்டுச்சென்ற தேசங்களாக, அவர்களின் பிரிதாளும் தந்திங்களை தக்கவைத்த தேசங்களாக இரண்டும் உள்ளன.

ஈழத்தில் இன்னுமோர் படி மேற்சென்று “ஜே ஆர்” காலத்தில் பிரித்தானியாவினால் ஆலோசனை வழங்கப்பட்ட தந்திரோபாயங்களை பரீச்சார்த்திக்க இஸ்ரேலின் உதவியை ஶ்ரீ லங்கா பெற்றுக் கொண்டது. அன்றில் இருந்து இஸ்ரேலின் பல தந்திரோய நகர்வுகளின் நாற்று மேடையாக ஈழமே இருந்து வருகின்றது.

நேற்று நாம் பட்ட அவலத்திற்கும், இன்று பலஸ்தீனர்கள் படும் அவலத்துக்குமான ஒற்றுமைகளாக 75 ஆண்டுகளில் ஓராயிரம் விடங்கள் ஒப்பிடலாம்.

இஸ்ரேலிய யுத்தம் வெல்லப்படுமாகில், தமிழர்களுக்கென்று வருங்காலத்தில் ஈழத்தின் ஹாஷா குறுநிலப்பரப்பாக யாழ் தீபகர்ப்பத்தையும், மேற்குக் கரையாக ஒரு நிலத்தையும் உருவாக்க சிங்கள பெளத்த இனவாதம் தயங்காது. அதற்கும் இஸ்ரேல் சிங்கள பெளத்த இனவாத்த்துடன் துணை நிற்கும்.

இஸ்ரேலியர்களுக்கு ஈழம் நாற்று மேடை என்றால் எமக்கும் அவர்களின் நகர்வுகளினால் உலகின் வாயை ஒடுக்க பாடங்களை கற்றுத்தரட்டும்.

கமலா பாலன்