சொல்லப்படாத தமிழ் இனப்படுகொலை குறித்த உண்மைகள்

முள்ளிவாய்க்கால் உண்மையின் சாட்சியமான வைத்தியர் வரதராஜாவின் ‘சொல்லப்படாத தமிழ் இனப்படுகொலை குறித்த உண்மைகள்’ (Untold Truth of Tamil Genocide) அவரைச் செவ்வி கண்டு தொகுத்து எழுதியுள்ளார் சமூகச் செயற்பாட்டாளர் இராஜி பற்றசன்!ஆங்கில மொழி வழி கல்வி பயிலும் தமிழ் இளையவர்களும் பல்லின ஆங்கிலம் புரிந்த மக்களும் படித்து தமிழினப்படுகொலை பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகளை உள்ளது உள்ளபடி அறிந்து உணர்ந்து உண்மைகளுக்காக மனச்சான்றோடு குரல் கொடுக்க இந்த நூல் துணைபுரியும் என்பது உறுதி!இந்த நூல் அதன் உலகப் பரப்பெங்கும் சென்று அதனது இலக்கினைச் சென்றடையவும் இந் நூல் வெளியீட்டு நிகழ்வு பெரும் வெற்றி பெறவும் இரு பெரும் ஆளுமைகட்கும் தமிழ் கூறும் நல்லுலகின் இனிய நல்வாழ்த்துகள்!போராட்டமே எம் வாழ்வு! இன்றைய தமிழர் எம் போராட்டத்திற்கு இந்நூல் தமிழர் எழுச்சியைத் தட்டி எழுப்பவும் வலிமை மிக்க கருவியாகி இனப் பகைவரை வெற்றி கொள்ளவும் வாழ்த்துகள்.

சிவந்தினி பிரபாகரன்