ஜப்பான் போர்க்கப்பல் இலங்கைக்குப் பயணம்

ஜப்பானின் நாசகார கப்பலான சாமிடரே, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கொழும்பு வந்தடைந்த இந்தக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி வரவேற்றனர்.

மேலும், இக்கப்பல் ஜூலை 29 ஆம் திகதியன்று நாட்டில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.