காவல்துறை அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தம் – தமிழ்தேசிய கூட்டமைப்பு நிராகரிப்பதாக சுமந்திரன் கருத்து

காவல்துறை அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என  ஜனாதிபதி தெரிவித்துள்ளதை தமிழ்தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது.

அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்விற்கான முன்மொழிவை மற்றுமொரு வெற்றுவாக்குறுதி என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் எங்கள் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த தயாரில்லை என்றால் அது 13ற்க்கு  அப்பால் செல்வதற்கு இலங்கை அரசிற்கு அரசியல் உறுதிப்பாடு இல்லை என்பதுதான் அர்த்தம்  எனதமிழ்தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏசுமந்திரன் இந்துநாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்  இடையிலான சந்திப்பின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் யோசனைகளை நாங்கள்முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் என  சுமந்திரன் தெரிவித்துள்ளார்.