சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் நடைபெற்றுள்ளது.
சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
கம்பு, திணை, வரகு, சாமை என பல வகையான சிறுதானியங்களில் இருந்து எவ்வாறு உணவு தயாரிப்பது என்பது பற்றி அங்கு தெளிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து சிறு தானிய உணவுகள் பரிமாறப்பட்டதுடன், உலர் தானிய வகைகளும் விற்பனை செய்யப்பட்டன.
அத்துடன், தானியங்களின் ஊடாக கிடைக்கும் போஷாக்கு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கண்காட்சியும் நடத்தப்பட்டது.