10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் 10 இனது விலைகளை குறைத்துள்ளதாக, லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த விலை குறைப்பு இன்று (24) முதல் அமுலுக்கு வருவதாகவும், அப்பொருட்களை நாடு முழுவதிலுமுள்ள சதொச விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய முடியுமெனவும் நிறுவனத்தின் விற்பனை பிரிவின் பிரதானி சவன் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் வறுமையை நீக்கும் தேசிய செயற்றிட்டத்திற்கு பங்களிக்கும், அரச பிரிவிலுள்ள ஒரேயொரு பல்பொருள் அங்காடி வலையமைப்பான தமது நிறுவனம், தமது நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், பின்வரும் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக, சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய,

1kg செத்தல் மிளகாய் ரூ. 120 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 1,380

1kg வெள்ளைப்பூடு ரூ. 25 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 450

1kg நெத்தலிக்கருவாடு ரூ. 25 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 1,100

1kg கடலை ரூ. 15 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 555

1kg உள்நாட்டு சம்பா அரிசி ரூ. 11 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 199

425g ரின் மீன் ரூ. 10 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 520

1kg பெரிய வெங்காயம் ரூ. 10 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 119

1kg உள்நாட்டு உருளைக்கிழங்கு ரூ. 10 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 270

1kg வெள்ளைச் சீனி ரூ. 7 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 210

1kg கடலைப் பருபு ரூ. 7 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 298