இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!

1 49 இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!

அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 10 ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தனது Xதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த 10 ஹெலிகொப்டர்களும் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கையை வந்தடையும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான Bell 206 SEA RANGER ரக ஹெலிகொப்டர்களே இலங்கை விமானப்படைக்கு வழங்கப்படவுள்ளது.

திட்வா பேரிடரின் போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஹெலிகொப்டர்கள் மிகவும் உதவியது.

இந்த 10 ஹெலிகொப்டர்களும் இலங்கை விமானப்படையையும் விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவும் எனவும் நம்பப்படுகிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் குறிப்பிட்டுள்ளார்.