இலங்கை நெருக்கடி: 1 இலட்சம் கோடி ரூபாய் பணம் அச்சிட திட்டம் – பிரதமர் ரணில் தகவல்

277 Views

இலங்கை பொருளாதார நெருக்கடி தீவிர நிலையை அடைந்துள்ள  நிலையில், மேலும் பணத்தை அச்சிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன்படி, மேலும் ஒரு இலட்சம் கோடி ரூபாய் பணத்தை அச்சிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

”எங்களுக்கு ஒரு ரூபாய் வருமானம் கூட இல்லை. நாங்கள் ஒரு இலட்சம் கோடி ரூபாய் பணத்தை மேலும் அச்சிடுகிறோம்” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பணவீக்கமானது 40 வீதத்தை எட்டும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறழயுள்ளார்.

விலையேற்றத்தினால் போராட்டங்களை நடத்தி வரும் மக்களுக்கு இது மேலும் அழுத்தத்தைக் கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

Tamil News

Leave a Reply