வெளிவிவகாரக் கொள்கையில் இந்தியாவுக்கு முன்னுரிமை – சிறீலங்கா

இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுப்பதே தமது வெளிவிவகாரக் கொள்கையின் பிரதான பணி என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சரும் முன்னாள் கடற்படை அதிகாரியுமான ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

புதுடில்லியின் கேந்திர பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் நாம் அக்கறை கொண்டுள்ளோம். அதன் பாதுகாப்புக்கு நாம் அச்சுறுத்தலாக இருக்கமாட்டோம். சீனா உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசு, இந்தியா ஆறாவது நிலையில் உள்ளது.

2018 ஆம் ஆண்டு இந்தியாவே பொருளாதார ரீதியாக உலகில் விரைவாக வளர்ந்துவரும் நாடாக இருந்தது. எனவே நாம் இந்த நாடுகளுடனும் நட்பாக இருப்போம். எமது நாட்டை வேறு நாடுகள் தமது எதிர் நாடுகளுக்கு எதிராக பயன்படுத்துவதை நாம் அனுமதிக்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.