“வெல்வதற்காக இல்லை சொல்வதற்காகவே தமிழ்ப்பொதுவேட்பாளர்” ஜனாதிபதி தேர்தல் ஓராண்டு நிறைவுப்பகிர்வு! : பா. அரியநேத்திரன்

தந்தை செல்வா நிறைவேற்றிய இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை அடிப்படையாக கொண்டு தந்தை செல்வா 1949 டிசம்பர்18 ல் ஆரம்பித்த இலங்கைத்தமிழ் அரசுக்கட்சின் கொள்கையை மீண்டும் உறு திப்படுத்தும் நோக்கில் ஒரு தமிழ் பொது வேட் பாளரை நிறுத்தி வடகிழக்கு மக்களின் ஒன்று பட்ட பலத்தை நிருபிக்க வேண்டும் என்ற கொள்கைக்காக வடகிழக்கில் உள்ள 83 குடிசார் சிவில் அமைப்புகள் 07 தமிழ்த்தேசிய கட்சிகள் 70 புலம்பெயர் அமைப்புகள், யாழ், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு, சகல முன்னாள் போராளிகள் அமைப்பு, கல்விச்சமூகம், தமிழ் புத்திஜீவிகள் என பலதரப்பட்டவர்களின் ஒருமித்த முடிவாக “தமிழ் பொதுவேட்பாளர்”  என்ற பெயருடன் பா.அரியநேத்திரன் வேட்பாள ராக முதல் தடவையாக நிறுத்தப்பட்டார். அவர்கள் தேர்தல் ஆணைக்குழுவில் சுயேட்சை சின்னமாக ‘சங்கு’ சின்னத்தை தேர்ந்தெடுத்தார்.
இதற்கு முந்திய தேர்தல்களிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர் அவர்கள் தனி வேட்பாளர்களாக வடகிழக்கை சேர்ந்த வேட் பாளர்களாக போட்டியிட்டனர். 1982 அக்டோபர் 20ல் முதலாவது ஜனாதிபதி தேர்தலில்  06 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் அதில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் கொழும்பை கொழும்பு வதிவிடமாகவும் கொண்ட குமார் பொன்னம்பலம் அவரின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி மூலமாக ஒரு தமிழ் வேட்பாளராக சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு 173937வாக்குகளை பெற்று 04 வது இடத்தை பெற்றார்.
1988,1994,2005,ஆகிய மூன்று ஜனாதிபதி தேர்தல்களில் தமிழர்கள் வேட்பாளராக எவரும் போட்டியிடவில்லை. 2010 ஜனவரி 26 ல் ஜனாதிபதி தேர்தலில் 22 வேட்பாளர்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழராக போட்டியிட்டு 09 வது இடத்தில் 9662 வாக்குகளை பெற்றிருந்தார்.
2015 ஜனவரி 08 ஜனாதிபதி தேர்தலில் 19 வேட்பாளர்களில் வடகிழக்கு சாராத தமிழர் சுந்தரம் மகேந்திரன் என்பவர் போட்டியிட்டு 4037 வாக்குகளை பெற்று 13வது இடத்தைப்பெற்றார்.
2019நவம்பர் 16ல் 34 வேட்பாளர்களில் காத் தான்குடி எம்.ஏ.எம் ஹிஷ்புல்லா, யாழ்ப்பாணத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் போட்டி யிட்டனர் ஹிஸ்புல்லாவுக்கு 38814 வாக்குகள் பெற்று 05ம் இடமும், சிவாஜிலிங்கம் மீன் சின் னத்தில் 12256 வாக்குகளை பெற்று 11வது இடமும் கிடைத்தது.
இறுதியாக கடந்த 2024 செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்களில் தமிழ் பொதுவேட்பாளராக மட்டக்களப்பில் இருந்து பா.அரியநேத்திரன் நிறுத்தப்பட்டு 05 வது இடத்தில் 226343 வாக்குகளை பெற்றார்.இந்த தேர்தலில் மலையகத்தை சேர்ந்த எம்.திலகராஜ் என்பவரும் தமிழராக போட்டியிட்டு 2138 வாக்குகளை பெற்று 36 வது இடத்தை பெற்றார்.
1982 தொடக்கம் 2024 வரை 08 ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றுள்ளது அதில் ஒரு தமிழ் வேட்பாளர் (பா.அரியநேத்திரன்) கூடிய வாக்கு களை பெற்ற தேர்தல் 2024 தேர்தல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் பொதுவேட்பாளர் இலங்கை ஜனாதிபதியாக வெற்றிபெற போட்டியிடவில்லை ஈழத்தமிழர்களுடைய அபிலாஷைகளை சொல் வதற்காகவே போட்டியிட்டார்.
இதில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியை சேர்ந்த சிலர் தமிழ் பொதுவேட்பாளரை எதிர்த்து சஜீத் பிரேமதாச எந்த ஒரு அரசியல் பொதுக்கொள்கையும் இன்றி தமிழ் பொது வேட் பாளரை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே கொள்கையுடன்  ஆதரித்தனர். வடகிழக்கில் எங் கும் சஜீத் பிரேமதாசவின் துண்டுப்பிரசுரங்கள், சுவ ரொட்டிகள், வீடுவீடாய் சென்று பிரசாரங்களில் ஈடுபட்டனர்.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரி அவர்களும் தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்க ளிக்காமல் பிரசாரம் செய்தனர். தேர்தல் 2024 செப்டம்பர் 21 ல் முடிவுற்றது தமிழ் பொது வேட்பாளருக்கு 226343 வாக்குகள் கிடைத்து இலங்கை வரலாற்றில் ஐந்தாம் இடம் கிடைத்தது. ஏனைய நான்கு இடங்களில் முதல் நான்கு இடங்களைப்பெற்றவர் இலங்கை அரசிய லில் பிரபலமான சிங்களத்தலைவர்கள்.
1. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கா.
2. முன்னாள் ஜனாதிபதி பிரமதாசாவின் மகன், தற்போதைய எதிர்கட்சி தலைவர் சஜீத்பிரமதாசா.
3. முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், முன் னாள் எதிர்கட்சி தலைவர், ஐக்கியதேசியகட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க.
4. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ.
5. தமிழ்பொதுவேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.(ஒரு தமிழன்)
தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் தமிழ் பொதுவேட்பாளரை எதிர்த்து பிரசாரம் செய்தவர்களுக்கு இரண்டு இலட்சத்துக்கு மேல் வாக்குகள் பெற்றது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் சில ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெறுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்சியை கொடுத்தது. அதனால் தமிழ் பொது வேட்பாளரை மக்கள் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என தமிழரசுக்கட்சி பதில் செயலாளர் எம் ஏ சுமந்திரன் ஊடகங்களில் கருத்து கூறியும் இருந்தார். அவருடைய கருத்துப்படி தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்த 226343 தமிழர்களும் தமிழ் பொதுவேட்பாளரை ஒரு பொருட்டாக கருதி வாக்களித்தனர் என்பதை கூற மனம் வரவில்லை.
தமிழ் பொதுவேட்பாளரை எதிர்த்து தமிழ ரசுக்கட்சியில் சிலரும், தேர்தலை பகிஷ்கரிக்குமாறு பிரசாரம் செய்த தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் ஏனைய தமிழ் அமைப்புக்களைப்போன்று தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்திருப்பின் ஏறக் குறைய ஆறு இலட்சம் வாக்குகள் தமிழ் பொதுவேட்பாளருக்கு கிடைத்திருக்கும் என்பது உண்மை.
சஜித் பிரேமதாசவை ஆதரித்த தமிழரசுக் கட்சியில் உள்ளவர்கள் கூறிய கருத்து அவரே வெற்றிபெறுவார் அவரே ஜனாதிபதியாக தெரிவா குவார் அதனால் ஆதரிப்பதாக கூறினர் வேறு எந்த கொள்கைக்காகவும் அவரை ஆதரிக்கவில்லை அவர்களின் தப்புக்கணக்கு இறுதியில் அவர்க ளுக்கே முகத்தில் கரிபூசியது அநுரா ஜனாதிபதி யானார்.
தமிழ் பொதுவேட்பாளர் வெல்வதற்கு அல்ல சொல்வதற்கு என்ற ஒரே காரணமே கூறப் பட்டது, சொல்வது என்றால் போர் 2009 மே 18  ல் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டும் 16 வருடங்கள் கடந்தும் கொள்கை மௌனிக் கப்படவும் இல்லை, மரணிக்கப்படவும் இல்லை என்பதை சர்வதேசத்துக்கு ஒரு கருத்துக்கணிப் பாகவே ஜனாதிபதி தேர்தலை ஈழத்தமிழ் அமைப் புகள் பயன்படுத்தியது என்பதே உண்மை.
தற்போது ஜனாதிபதி தேர்தல் முடிந்து ஒருவருடம் கடந்த நிலையில் தேசியமக்கள் சக்தி 159 ஆசனங்களை பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஜனாதிபதி அநுர தலைமையில் ஆட்சி தொடர்கிறது.
ஒருவருடத்தில் வடகிழக்கு தமிழர்கள் எதிர்பார்த்த எவையும் கிடைக்கவில்லை ஆனால் பொதுவான சில அபிவிருத்திகள், ஊழல் வாதிகளுக்கு எதிரான நீதிவிசாரணை, போதை வஷ்த்து கடத்தல் புள்ளிகள் கைது, முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து,என சில விடயங்கள் நடந்துள்ளது உண்மை. ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சியில் உள்ள சிலர் ஓடி ஓடி பிரசாரம் செய்த சஜீத்பிரமதாசா தற்போது எதிர்கட்சிதலைவராக நாடாளுமன்றில் இருந்தும் கூட வடகிழக்கில் உள்ள செம்மணி புதைகுழி தொடர்பாகவோ, மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பாகவோ, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக பூரண நிர்வாம் தொடர்வாகவோ, மன்னார் காற்றலை தொடர்பாகவோ, அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாகவோ, கடந்த ஒரு வருடமாக வாயே திறக்கவில்லை அவருக்கு வாக்களிக்குமாறு இரவு பகலாக பிரசாரம் செய்தவர்கள் சஜித்பிரமதாசாவின் உண்மை முகம் இப்போதாவது தெரிந்திருக்கும்.
தமிழ்தேசியகட்சிகளில் 07 கட்சிகள் அன்று தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய போது அதனை எதிர்த்த தமிழரசுகட்சி பதில் செயலாளர் சுமந்திரன் அணியும், கஜேந்திரகுமார் தலைமயிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் இன்று ஒரே மேசையில் அமர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் கையொப்பம் பெறும் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு ஒற்றுமைபட்டு ஊடக சந்திப்பை நடத்தியுள்ளனர்.
காலம் கடந்த இந்த ஞானம் கடந்த ஜனாதி பதி தேர்தலில் பிறந்திருப்பின் தமிழ் பொது வேட்பாளரை அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஆதரித்தனர் என்ற செய்தி பலமாக காட்டப்பட்டு தமிழ் பொதுவேட்பாளர் பெற்ற 226343 வாக்குகளை 600000 வாக்குகளாக மாற்றியிருக்கலாம்.
இனியாவது திருந்தி தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனை விடயங்களில் எல்லாம் சகல கட்சிகளும் ஒருகுடையில் ஒரு குரலாக போராடு வது காலத்தின் தேவை. இது தியாகி தீலிபனின் 38 வது ஆண்டிலாவது உணரப்படுவது அவசியம்.
இதேவேளை தமிழ் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட அரியநேத்திரனுக்கு தமிழரசுக்கட்சி யின் 1, வது பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் 2024 செப்டம்பர் 11ல் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார், அதற்கான விளக்கத்தை 2024 செப்டம்பர் 14ல் அரியநேத்திரன் அனுப்பினார் அதற்கான பதில் அவருக்கு கிடைக்கவில்லை பின்னர் பதில் கிடைக்கவில்லை என 2025 ஜனவரி 10 ல் மீண்டும் 1வது பதில் செயலாளருக்கு கடிதம் அனுப்பியும் இதுவரை ஒருவருடம் கடந்தும் எந்த பதிலும் இல்லை.தற்போது அவர் பதவி விலகிய நிலையில் 2 வது பதில் பொதுச்செயலாளராக சுமந்திரன் கடந்த 2025 பெப்ரவரி 16 ல் களுவாஞ்சிகுடி மத்தியகுழு கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டார்.
அரியநேத்திரன் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரும் தொடர்ந்து தமிழ் அரசுக்கட்சிக்கே ஆதரவாக செயல்பட்டுவருகிறார் 2024 நவம்பர் 14 ல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியை ஆதரித்து மட்டக்களப்பில் பிரசாரம் செய்தார், மூன்று பாராளுமன்ற உறுப் பினர்கள் தெரிவானதில் அரியநேத்திரனின் பங்களிப்பும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தது.
அதுபோல் கடந்த 2025 மே 06ல் இடம் பெற்ற உள்ளூராட்சி தேர்தலிலும் தமிழரசுக் கட்சிக்கே அவர் ஆதரவு வழங்கினார் என்பது குறிப் பிடத்தக்கது.