வெடுக்குநாறி மலையில் பதற்றம் : நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்!

f21c83ef b21b 48d8 b210 2fc5bda7e38b dO1nY HHY transformed வெடுக்குநாறி மலையில் பதற்றம் : நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்!வெடுக்குநாறி மலையில் இன்றையதினம் [08] பூஜை வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் மாலை வேளையில் பதற்றநிலை சற்று அதிகரித்துள்ளதுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளி்ட்ட பலர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் வழிபாடுகளில் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் பொலிஸார் மாலை ஆறுமணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறு தெரிவித்திருந்தனர்.

பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை முன்னெடுத்திருந்ததுடன் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியவற்றை பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதனால் பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பொலிஸார் எடுத்துச்சென்றுள்ளனர்.