ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடை யில் இரண்டுமாத கால இழுபறிகளுக்குப் பின்னரே, சந்திப்பொன்று கடந்த 19ஆம் திகதி நடத்தப் பட்டிருக்கிறது.
இந்தச்சந்திப்பை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகக் கருதினாலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவ்வாறு கருதியிருக்கவில்லை என்பது மிகத் தெளிவாகவே தெரிகின்றது.
நாட்டில் நீண்டகாலமாகப் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண் பதற்கு ஜனாதிபதி அநுரகுமார இதயசுத்தியுடன் சிந்தித்திருந்தால் ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் வரையில் அதற்கான ஒரு அடியைக்கூட முன் வைக்காது இருந்திருக்க முடியாது.
ஆனால் ஜனாதிபதி அநுரகுமாரவோ அல்லது, அவரது அரசாங்கத்தினரோ இதுவரை தமது தரப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த எவ்வித முன்முயற்சிகளையும் முன்னெடுத்திருக்கவில்லை.
ஆனால் தேசிய இனப்பிரச்சினை என்ற தொன்று நாட்டில் இல்லை என்பதை நிலை நிறுத்துவதற்கு வெவ்வேறு தளங்களில் அத் தரப்பினர் செயற்பட ஆரம்பித்தனர் என்பது வெளிப்படையானது.
இத்தகைய நிலையில் தான் வேறு வழிகளின்றி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எழுத்துமூலமாக ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு நேரஒதுக்கீட்டை வழங்குமாறு கோரியது. மீண்டும் நினைவூட்டலையும் அனுப்பியிருந்தது.
சிறிதரனும், சாணக்கியனும் தமது பங்கிற்கு தனித்தனியாகவும் சந்திப்பை நடத்துவதற்கு நேரம் ஒதுக்குங்கள் என்றும் கோரியிருந்தனர். சுமந்திரனும் குறுந்தகவல் மூலம் ‘தனிப்பிட்ட நட்புரிமையில்’ சந்திப்பை நடத்துவதற்கான உந்துதலைச் செய்திருந்தார்.
இவ்வாறான கோரிக்கைகளின் பின்னணி யில் தான் அநுரகுமாரவுடன் ஒன்றரை மணி நேரம் சந்திப்பொன்று நடத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக சந்திப்பின் பலாபலன்களைப் பார்த் தால் ‘ஏமாற்றம்’ தான்.
பல வலியுறுத்தல்களின் பின்னணியில் நடத்தப்பட்டவொரு சம்பிரதாயபூர்வமான சந்திப் பாக இருந்ததேயன்றி, ஆக்கபூர்வமான சந்திப்பாக இருக்கவில்லை.
அநுரகுமார நன்கறிந்திருக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் மீண்டும் கூறவும், ஜனாதிபதி அநுர அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.எந்தச் சந்தர்ப்பதிலும் அவர் முரண்படவில்லை.
பின்னர் அந்த விடயங்கள் சம்பந்தமாக ஜனாதிபதி அநுர, அதிகாரிகளுடன் பேச வேண் டும், தொடர்ந்தும் பேசுவோம், மாவட்ட அபி விருத்திக்குழுக் கூட்டத்தில் கவனமெடுப் போம், விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரி டம் கூறுகின்றேன் என்று தான் பதில்கள் அளிக் கப்பட்டன.
குறித்த அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் கூட ஜனாதிபதியிடமிருந்து எந்தவொரு சந்தர்ப் பத்திலும் உடனடியான தீர்வுக்குரிய நம்பிக்கை யான வார்த்தைகளும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை .
அதுமட்டுமன்றி, தமிழ் மக்களின் அபிலா சைகளைப் பூர்த்தி செய்யாத மாகாண சபைகள் தொடர்பிலும் கூட தேர்தல்களை நடத்துவோம் என்று ஜனாதிபதி அநுர கூறிய போதும், அதற்கான காலவரையறையை அவர் வெளிப்படுத்த தயாராக இந்திருக்கவில்லை.
தமிழ் அரசுக் கட்சி தனது ‘இந்திய விசுவாசத்தை’ திருப்திப்படுத்துவதற்காக மாகாண சபைத்தேர்தல் சம்பந்தமாக சற்றே அழுத்த மளிக்கும் வகையில் வினாக்களைத் தொடுத்தா லும் ஜனாதிபதி அநுர அதனைப் பொருட்படுத்தி இருந்திருக்கவில்லை..
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சிக்கலான விடயம் என்ற போதும், பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு சட்டத்தில் சிறிய திருத்தத்தைச் செய்து முன்னெடுக்க முடியும். அதற்கான முன்மொழிவும், எதிர்க்கட்சிகள்; ஒத்துழைப்பதாக வாக்குறுதியும் அளித்துள்ளன. ஆனாலும், தெரிவுக்குழு அமைத்து ஆராய வேண்டும், எல்லை நிர்ணயம் குறித்து அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசனை நடத்த வேண்டும் என்றெல்லாம் அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கையில், ஜனாதிபதி அநுர ‘பந்தை’ பாராளுமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டுத் தப்பித்துவிட்டார்.
அத்தகையவர், மாகாண சபைகளுக்கான தேர்தல் குறித்து எந்தவொரு உறுதிமொழியையும் வழங்குவார் என்று எதிர்பார்க்க முடியாது. அநுரவும் அந்த விடயத்தில் மிகத்தெளிவாகவே இருந்தார். அடுத்தாக, மிக அண்மைய நெருக்கடி யான திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் காணப்படுகின்றது. அந்த விடயம் சம்பந்தமாக சுட்டிக்காட்டப் பட்டபோதும், ஜனாதிபதி மக்களின் உளவியல் மாற்றம் பற்றி பேசியிருகின்றமை வேடிக்கையான விடயம்.
புத்தர்சிலை விடயத்தில் தமிழ் மக்களோ அல்லது பொதுமக்களோ நேரடியாக சம்பந்தப் படவில்லை. அதில் சம்பந்தப்பட்டது, தேரர்களும் அரச அதிகாரிகளும், சட்டம் ஒழுங்கு தரப்பினரும் தான். அப்படியிருக்கையில் மக்களின் உளவியலில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்று கூறுவது எந்த அடிப்படைகளிலானது என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றது.
அதுமட்டுமன்றி, பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் திருகோணமலைக்குச் சென்றதும், ஏனைய பௌத்த பீடங்கள் கொதித்தெழுந்ததையும் ஜனாதிபதி அநுர அவதானித்த பின்னரும் தேரர்க ளின் மனோநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற அவர் வலியுறுத்தியிருக்கவில்லை.
இந்த நிலைமையானது, வழக்கமான ஆட்சியாளர்களைப்போன்றே அநுரவும் பௌத்த தேரர்களுக்கு அடிபணிந்து செல்லும் நிலைமையும், காவியுடைக்குள் மறைந்திருந்து காய்நகர்த்தும் தந்திரத்தினையும் பின்பற்றுகின்றார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இறுதியாக, தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அநுரவைச் சந்திப்பதற்கான பிரதான காரணம், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துப் பேசுவ தாகும். முன்னைய அரசாங்கங்களுடன் பேச்சுக்கள் நடந்தபோதும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறுதித் தீர்வை முன்நகர்த்த முடிந்திருக்கவில்லை என்பது வரலாறு.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்னர் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றும் ஏற்கனவே மைத்திரி-ரணில் கூட்டாட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக் கையிலிருந்து அச்செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது தேசிய இனப்பிரச்சி னைக்கான அடிச்சுவட்டையே மறைப்பதற்கு முயலும் அரசாங்கம் அவ்விடயம் பற்றி தெளிவாக எந்த விடயத்தினையும் வெளிப்படுத்தவில்லை.
ஜனாதிபதி அநுர தேசிய இனப்பிரச்சி னையை வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளாக மட்டுப்படுத்தியதோடு நிரந்தரமான தீர்வு காண் பதற்கு புதிய தீர்வு வேண்டும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அந்த தீர்வு எத்தகையது, எங்கிருந்து ஆரம்பிக்கப்படப்போகின்றது, எவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்தப்படப்போகின்றது என்பது குறித்து தெளிவான விடயங்கள் எவையுமே இல்லை.
ஆக, தமிழ் அரசுக் கட்சியுடன் ஜனாதிபதி நடத்தியுள்ள பேச்சுக்கள், ஊடகங்களுக்குத் தலைப் புச் செய்தியைக் கொடுத்திருந்தாலும், தமிழ் மக்களுக்குத் தீர்வுகளை வழங்கக்கூடிய ஒன்றாக இருக்கவில்லை.
அந்த வகையில் இச்சந்திப்பு பயனற்ற தொன்றாகவே முடிந்திருக்கிறது. தமிழ் அரசுக் கட்சி தீர்வுகளைத் தேடி மட்டும் இந்தச் சந்திப்பை நடத்தவில்லை. அது தமிழ் மக்களின் பிரதான மக்கள் பிரதிநிதிகள் தாங்களே என்று நிறுவுவதற்காகவும் இந்தச் சந்திப்பை நடத்தியுள்ளது.
அந்த நோக்கம் நிறைவேறியிருக்கலாம். ஆனால் தமிழ் அரசுக்கட்சி குறைந்த பட்சம் குறித்த சந்திப்பைக் கூட ஒருங்கிணைந்ததாக முன்னெடுத் திருக்கவில்லை. சந்திப்புக்கு முன்னதாக குழுக்கூட்ட மொன்றை நடத்தி அதில் பேசப்பட வேண்டிய விடயங்கள் சம்பந்தமாகவும் திட்டமிடலைச் செய்திருக்கலாம். அநுரவுக்கு அழுத்தமளிக்கும் உபாயங்களை வகுத்திருக்கலாம். ஆனால் அவ்விதமான செயற்பாடுகள் எவையுமே முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. வெறுமனே ஜனாதிபதிக்கு முன்னால் சென்று தமக்குள் காணப்படுகின்ற உட்கட்சிப் பூசல் களையும் வெளிப்படுத்தி அம்பலப்பட்டுக் கொண்டுள்ளது.
தமிழ் அரசுக்கட்சி, தமிழ் மக்களுக்கான தலை மைத்துவத்தை வழங்குவதற்கான அதிகாரத் தினை கையிலெடுத்துவிட்டு அவ்வாறு செயற்படுவ தானது அபத்தமானது. அவ்வாறான நிலையில் பார்க்கின்றபோது, ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அண்மித்த காலத் தில் தேசிய பிரச்சினை தொடர்பிலான உரை யாடல்களை ஆரம்பிப்பதற்கான எந்த தேவையும் இருக்காது.



