தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் களத்தில் எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்து உள்ளனர்.
விஜய்யின் கட்சியான தமிழக வெற் றிக் கழகம் அறிவிக்கப்பட்டு கடந்த 27 அக் டோபர் அன்று தனது முதல் மாநாட்டை நடத்தி உள்ளது!
த.வெ.க அறிவிப்பு வந்த போது கூட மைய நீரோட்ட ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் விவாதங்கள் ஏதும் இல்லை என்ற நிலை தான் இருந்தது ஆனால் கட்சியின் முதல் மாநாடு தமிழக அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரை ஆச்சரியம் அடைய வைத்துள்ளது! காரணம் முதல் மாநாட்டிற்கு கூடிய கூட்டம் இன்றி வேறில்லை. ஏறக்குறைய எட்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்/ரசிகர்கள் கலந்து கொண்டனர். த.வெ.க வின் தலைவர் விஜய்யே இதை எதிர்பார்த்து இருப்பாரா என்பது சந்தேகம் தான்!
விஜய் மாநாட்டிற்கு கடிய கூட்டம் தான் தமிழக அரசியல் கட்சிகளின் வழமை யான அரசியல் கணக்குகளை மாற்றி யோசிக்க வைத்துள்ளது!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மரணத்திற்கு பின் மோடியினால் ஏற் படுத்தப்பட்ட அரசியல் சூனிய நிலையை நன்கு பயன்படுத்தி கொண்டு யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வரும் திமுகவிற்கு விஜய்யின் மாநாடு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் திமுகவின் ஆதரவாளர்கள் விஜய்க்கு எதிராக கருத்து யுத்தம் நடத்துவதில் இருந்தும் திருமாவளவனின் நீண்ட அறிக்கையிலிருந்தும் இதை புரிந்து கொள்ள முடியும்!
திமுக விற்கு வலுவான எதிர் தரப்பு இன்மையால் தொடர் வெற்றிகளை மட்டுமே அறுவடை செய்து வந்த திமுக தனது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து யோசிக்க ஆரம்பித்து உள்ளது!
பாசிசம் எதிர்ப்பு குறித்து விஜய்யின் விமர்சனம்!
விஜய் தனது பேச்சின் ஊடாக பாசிச எதிர்ப்பு குறித்து விமர்சனங்களை வைத்தோடு பாசிச எதிர்ப்பு என்ற முழக்கத்தின் கீழ் தமிழக மக்களை ஆளும் திமுக ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டினார்! கூடுதலாக பாஜகவோடு திமுக கள்ள உறவில் இருப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்! விஜய்யின் இந்த விமர்சனங்கள் பலரால் ஏற்றுக் கொள்ள பட்ட விமர்சனங்கள்!
பாசிச பாஜக என்ற முழக்கத்தினை திமுக வின் வெற்றிக்கான சூத்திரமாக ஆக்கி விட்டார்கள்; மோடியால் இலாபம் அடைந்த ஒரே தரப்பை கூற வேண்டுமானால் ஸ்டாலின் குடும்பத்தை தான் கூற வேண்டும்; அதிமுகவை நிலைகுலைய வைத்து திமுகவின் வெற்றிக்கு மோடி உதவினார்: ஒரு வேளை அதிமுக வலுவான நிலையில் இருந்ததால் ஸ்டாலின் கனவில் மட்டும் தான் முதல்வர் ஆகியிருப்பார்! என்பது சில அரசியல் ஆய்வாளர்கள் கூற்று!
பாஜக வை சித்தாந்த எதிரியாக அடையா ளப் படுத்திய விஜய் திமுகவை தனது அரசியல் எதிரியாக அடையாளப்படுத்தி உள்ளார்!
தமிழ்நாட்டு அரசியல் களத்தில் சித்தாந்த மும் அரசியலும் படும் வேதனை சொல்லி மாளாது. புதிதாக விஜய் கிளம்பி உள்ளார்! இவை குறித்து எல்லாம் தமிழக அரசியல் கட்சியினருக்கு அக்கறை கிடையாது; தமிழ்நாட்டு அரசியல் களத்திற்கு இவை தேவையும் இல்லை என்று நீண்ட காலமாக முடிவு செய்து உள்ளனர்.
பயன்பாட்டுவாதமே தமிழக அரசியலில் நீக்கமற நிறைந்து உள்ளன! விஜய்யும் இவ் விடயத்தில் ஒத்துப் போகிறார் என்றே தெரிகிறது!
திராவிடமும் தமிழ்தேசியம்!
திராவிடமும் தமிழ்தேசியமும் வேறு வேறு அல்ல இரண்டும் ஒன்று தான்; என்று விஜய் கூறி இருப்பது வரவேற்கத் தக்கது! திராவிடம் எதிர் தமிழ்தேசியம் என்ற நிலைபாட்டால் தமிழகம் இழந்ததே அதிகம்! விஜய் இரண்டையும் சமப்படுத்தி உள்ளமை உண்மையில் பாராட்டுக்குரியது! இந்திய இறைமையை ஏற்றுக்கொண்டு தமிழ் தேசியத்திற்கு எப்படி உதவுவார் என புரியவில்லை! தமிழ்தேசியம் எதிர் இந்திய தேசி யம் என்று இருந்த அரசியலை உடைத்து தில்லியின் மனம் குளிர வைத்தவர் சீமான்! திராவிடம் எதிர் தமிழ்தேசியம் என்ற வெகுஜன அரசியலால் ஆதாயம் அடைந்த முதன்மையான தரப்பென்றால் அது புதுதில்லி அதிகார வர்க்கம் தான் முள்ளிவாய்க்காலின் கோரமான முடிவுக்கு இந்தியாவை பழி சுமத்துவதிலிருந்து திராவி டம் எதிர் தமிழ்தேசியம் என்ற கருத்துருக்கள் பாதுகாப்பு வழங்கியது! இருதரப்பும் அறிந்தே தில்லியை பாதுகாத்தனர்! விஜய் யின் வழியும் தனி வழியில்லை என்பதை மாநாட்டு உரையிலிருந்து புரிந்து கொள்ள முடியும்?
தேர்தல் அரசியல் களத்தில் விஜய் ஒரு தவிர்க்க இயலாத சக்தியாக மாறுவார் என்று த.வெ.க வின் முதல் மாநாடு நிருபிக்க தவற வில்லை! பழ. நெடுமாறனின் தீவிர விசுவாசி யாக அறியப்படும் ஊடகவியலாளர் அய்யநாதன் தான் விஜய்யின் பேச்சுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்து உள்ளதாக பரவலாக செய்தி வருகிறது!
ஆளும் திமுகவின் மீதான தமிழக மக்களின் அதிருப்தி மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்முடக்கம் என விஜய் பக்கம் பலமா கவே காற்று வீசுகிறது! விஜய் இதை பயன்படுத்தி கொள்ளவே தக்க நேரத்தில் தனது கட்சி அறிவிப்பை வெளியிட்டு முதல் மாநாட்டையும் நடத்தி முடித்து உள்ளார்!
விஜய்யின் வரவால் முதல் பாதிப்பே சந்தேகமின்றி சீமானுக்கு தான்! சீமானின் வாய் தான் வேலை செய்கிறதே தவிர சீமான் வேலை செய்வதாக தெரியவில்லை! நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக ஆரம்ப கட்ட காலத்தில் உழைத்தவர்கள் இப்போது யாரும் சீமானோடு இல்லை! தன்னை சுயம்பு வாகவும் எல்லாம் வல்ல ஏக சக்தியாகவும் நினைத்து சீமான் உளறிய உளறல்களை கேட்க சகிக்க வில்லை!
தனது கட்சி ஊழியர்களை கிரீஸ் டப்பாக்கள் என ஏளனம் செய்யும் சீமான் அடுத்த கிரீஸ் டப்பாவாக மாறினாலும் ஆச்சரியப் பட ஏதும் இல்லை! விஜய்யின் ஊழல் ஒழிப்பு முழக்கம் வழமைபோல பம்மாத்து இந்திய அரசியல் களத்தில் ஊழல் ஒழிப்பு குறித்து பேசாத கட்சிகளே இல்லை! இதற்கு முரணாக அனைத்து கட்சியினர் மீதும் இலஞ்ச ஊழல் புகார்களும் குவிந்தே கிடக்கின்றன! விஜய்யின் ஊழல் ஒழிப்பு குறித்து பெரிதாக பேச ஏதும் இல்லை!
நீண்ட காலமாக தமிழக அரசியல் களம் இரு துருவ அரசியல் இன்மையால் அல்லல் படுகிறது! திமுக வகுத்ததே சட்டம் என்ற நிலை தான் தொடர்கிறது! அதிமுகவோ உட்கட்சி பிரச்சினைகளை சமாளிக்கவே நேரம் போதவில்லை. ஆளும் வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு சிறந்த தேர்வாக விஜய் இருக்கவே செய்வார்! விஜய்யை விட்டால் தற்போது வேறு தலைவர்களும் இல்லை! இதில் சந்தேகம் வேண்டாம்!
சாதியையும் தமிழ்நாட்டு தேர்தல் அரசியலையும் பிரித்து பார்க்க முடியாது என்ற எதார்த்ததை நன்கு புரிந்து வைத்திருக்கிறார் விஜய்! ஏற்கனவே தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான சாதிகளை தனது மாநாட்டில் மூலமாக அடையாளப்படுத்தி கௌரவித்தது உள்ளார்! சமூகநீதி பெண்ணியம், தீண்டாமை ஒழிப்பு, மாநில தன்னாட்சி, தமிழ் மொழி உரிமை,நீட் தேர்வு எதிர்ப்பு, என சகல தரப்பினரும் ஏற்கும் வண்ணம் தனது முதல் உரையை நிகழ்த்தி உள்ளார்!
மாநாட்டில் பாஜக மற்றும் திமுகவை சாடிய விஜய் காங்கிரஸ், அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் என எதையும் சாடாமல் ஒதுங்கி க் கொண்டதோடு கூட்டணி ஆட்சிக்கான அழைப்பையும் விடுத்துள்ளார்!
யாழ்ப்பாணத்து மருமகன் என்று அழைக்கப்படும் விஜய்
உலகத் தமிழர்கள் குறித்து வெளிப்படையாக பேசிய போதும் ஈழத் தமிழர்கள் குறித்து ஏதும் பேசாமல் தவிர்த்து உள்ளார்! விஜய்யை விமர்சனம் செய்யும் நடுநிலையாளர்கள் பலர் திமுகவின் பக்கம் நின்று கொண்டு விமர்சித்து வருவது எப்படி பட்ட பலனைத் தரும் என்று புரியவில்லை! திமுக ஆதரவு விமர்சனங்களை தமிழக மக்கள் ரசிக்கப் போவதில்லை என்றே தெரிகிறது!
விஜய் , பாஜகவோ சீமானோ அல்ல இவ்விருவரின் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது போல விஜய்யை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது ஆளும் திமுக மற்றும் பாஜகவிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த முனைந்து அதில் வெற்றிபெறுவாரா? என்றே தற்போதைய நிலையில் கூற முடியாது; காலம் என்ன புதிர் போட்டுள்ளது என்பது போகப் போகத் தான் தெரியும்!
கேஸ்ட் நியூட்ரல்(caste neutral) தலைவர்க ளையே தமிழ் நாடு முதல்வராக தேர்வு செய்து உள்ளமை குறிப்பிடத்தக்கது ; விஜய்யும் தான் ஒரு கேஸ்ட் நீயுட்ரல் என்றே நிருபிக்க முயல்கிறார்; விஜய் இவ்விடயத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாவே உள்ளது!
தமிழ்நாடு எத்தனையோ அரசியல் தலை வர்களை பார்த்து உள்ளது! வழமைக்கு மாறாக விஜய் புத்தம் புதிய அரசியல் வரவு அவ்வளவு தான்!



