வாழ்வதற்கு வழியின்றியுள்ள நாட்டு மக்கள் செங்கடலை பாதுகாக்கவேண்டுமா? கேள்வி எழுப்புகின்றார் கர்தினால் மல்கம

நாட்டு மக்கள் வாழ வழியின்றி மோசமான நிலையில் இருக்கும் இத்தருணத்தில் செங்கடலை பாதுகாக்க கப்பலை அனுப்பும் செயல்பாடு இத்தருணத்தில் அவசியமா என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளாா்

கொழும்பில் இடம்பெற்ற ஆராதனைக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே பேராயர் இவ்வாறு அவா் கேள்வி எழுப்பினாா்.

“செங்கடலின் பாதுகாப்புக்கு கப்பலை அனுப்பும் செயல்பாடு இத்தருணத்தில் அவசியமற்ற ஒன்றாகும். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வதற்கு வழியில்லாதுள்ளனர். அதன் காரணமாக இத்தருணத்தில் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பவே நாம் செயலாற்ற வேண்டும்.

மக்களுக்கான கடமைகளையும் பொறுப்புக்களையும் அரசாங்கம் புறக்கணித்துள்ளது” என்றும் பேராயர் குற்றஞ்சாட்டினாா்.