வாக்களிக்கக் கோரி வந்தால் தாக்கப்படுவீர்கள்: வேட்பாளர்களுக்கு கிராம மக்கள் எச்சரிக்கை

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கோரி தமது கிராமத்துக்கு வரும் வேட்பார்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மாத்தளை – நாவுல, அடவல கிராம மக்களே இவ்வாறான எச்சரிக்கை விளம்பரங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

பல ஆண்டுகளாக தங்கள் கிராமத்துக்கு வருகை தந்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.