வவுனியா மாவட்டத்தில் தற்போதும் வீடுவாசல் இல்லாமல் மந்தைகள் வசிக்கும் இடங்கள் போல கொட்டகைகளுக்குள் கைக் குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பங்களும் வாழ்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஊரடங்குச் சட்ட காலகட்டத்தில் கூலிவேலைகள் கூட கரம் கிட்டாமல் அன்றாடம் அரைவயிற்றுக் கஞ்சிக்கே கஸ்டப்படும் நிலையில் வாழ்கின்றனர்.

நீங்கள் பார்க்கும் இடம் ஆடுமாடுகள் வசிக்கும் இடமல்ல மனிதன் வசிக்கும் கூடாரம் அதுவும் வவுனியா தவசிகுளம் ஆற்றங்கரை ஓரக் குடியிருப்பிலேயே இந்த இளம் குடும்பம் வசித்து வருகின்றது.





இவ்வாறு வவுனியா மாவட்டத்தில் யேசுபுரம், கிறீஸ்தவகுளம், ஆச்சிபுரம், ஈஸ்வரிபுரம், கப்பாச்சி, வீரபுரம், மரையடித்தகுளம், விளக்குவைத்தகுளம், போன்ற பல கிராமங்களில் வசிக்கும் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட 10 வருடங்கள் கடந்தும் இன்றும் அவலநிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் வாழ்க்கை முறைபற்றி இதுவரைகாலமும் எந்த அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் கவனம் செலுத்தாமல் அசண்டையாக இருப்பது மிக வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரிய விடையம்.
தாயகத்தில் சிலஇடங்களில் மனிதம் வாழ்ந்தாலும் பல இடங்களில் மனிதம் மரணித்து போய்விட்டது.



