“வளமான நாடு – அழகான வாழ்க்கை” : தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால் இன்று கொழும்பில் வெளியிட்டப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தேர்தல் விஞ்ஞாபனத்தை மத தலைவர்களுக்கு வழங்கினார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு பதிலாக மாற்று முறைமையை செயற்படுத்தும் திட்டங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.