வல்வை ஆனந்தராஜ் எழுதிய “துயரம் தோய்ந்த நவாலிப்படுகொலைகள்” – நூல் வெளியீடு

Unknown 19 வல்வை ஆனந்தராஜ் எழுதிய “துயரம் தோய்ந்த நவாலிப்படுகொலைகள்” - நூல் வெளியீடு

இலங்கையில் கடந்த  1995  யூலை 09 ம் திகதி விமானப்படையின்  குண்டுவீச்சில்  153 தமிழ் அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த படுகொலை குறித்து ஈழத்தின்  எழுத்தாளர்களில் ஒருவரான  வல்வை  ஆனந்தராஜினால்  எழுதப்பட்ட “துயரம் தோய்ந்த நவாலிப்படுகொலைகள்” எனும்  வரலாற்று ஆவணநூல் லண்டன்  குறைடன் பகுதியில் உள்ள கேட்போர் கூடத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.

Unknown 2 10 வல்வை ஆனந்தராஜ் எழுதிய “துயரம் தோய்ந்த நவாலிப்படுகொலைகள்” - நூல் வெளியீடு

ஊடகவியலாளர் தம்பையா தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூலின் அறிமுக உரையை  ஆசிரியர் கந்தையா  பாலகிருஸ்ணனும் வெளியீட்டு உரையை திருமகாலிங்கம் சுதாகரனும்  நிகழ்த்தினர் .

தொடர்ந்து கருத்துரைகளை அருட்தந்தை ஜெபநேசன், சிவசிறிராம்  வாகீசக்குருக்கள் , போரியல் ஆய்வாளர் கலாநிதி  அரூஸ், வைத்திய கலாநிதி திருமதி இந்துமதி ஆகியோர்  வழங்கினார்கள் .

Unknown 1 11 வல்வை ஆனந்தராஜ் எழுதிய “துயரம் தோய்ந்த நவாலிப்படுகொலைகள்” - நூல் வெளியீடு

இறுதியாக நூலின் ஏற்புரையை ஒய்வுபெற்ற கல்விப்பணிப்பணிப்பாளரும் நூலாசிரியருமான வல்வை ஆனந்தராஜ்  வழங்கினார் . இந்த நிகழ்வில் பொதுமக்கள் தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .