வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு சீனாவால் நிதி உதவி வழங்கி வைப்பு

01 8 வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு சீனாவால் நிதி உதவி வழங்கி வைப்பு

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் இன்று  (20) கையளித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்  , வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்   இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். இதன்போதே அவர் இந்தக் காசோலையைக் கையளித்தார்.