வட மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து இன்று வியாழக்கிழமை (01) காலை 9 மணிக்கு மே தின உந்துருளிப் பேரணி ஆரம்பமானது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் தொடங்கிய இந்த ஊர்வலம் ஆரியகுளம் சந்தி – ஸ்ரான்லி வீதியூடாக யாழ். நகரை அடைந்து, யாழ். மாவட்ட செயலகத்துக்கு அருகில் உள்ள வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நிறைவடைந்தது.