கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதோடு, அந்த காலத்தில் நிகழ்ந்த போர் குற்றங்களுக்கு நீதியை கோரும் நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம் பெற்று வருகின்றது.
அந்த வகையில், திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்திலுள்ள இறால்குழி கிராமத்தில்,முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் வியாழக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி பரிமாறப்பட்டது.
அதேபோல் பருத்தித்துறை முனை கடற்கரையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் சங்கானை நகரப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.