வடக்கு கிழக்கில் கடைசியாக இரு உள்ளூராட்சி சபைகளில் இன்று (30) ஆட்சி அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி நெடுந்தீவு மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய இரண்டிலும்இ. இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத்தை அமைத்திருக்கிறது.
அதற்கமைய, நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசுக் கட்சியின் சங்கரப்பிள்ளை சத்தியவர்தன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். உபதவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் செபஸ்ரியன் விமலதாஸ் தெரிவாகியுள்ளார்.
‘இலங்கை தமிழரசுக் கட்சி 58 சபைகளில் போட்டியிட்டாலும், 12 சபைகளில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள்’. ‘ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளைப் பெறுவதற்காகவே அவற்றில் நாம் போட்டியிட்டோம், அப்படி பிரதிநிதித்துவத்தைப் பெற்றும் கொண்டோம்’ என்று கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மிகுதி 46 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளது.
இதன்படி ’58 சபைகளில், 46 இல் எமது இலக்கை அடைந்துள்ளோம் என்றும் மிகுதி சபைகளிலும் இரண்டாவது இடத்தை வகிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குக் கிடைத்த பெரு வெற்றி என்பதற்கு அப்பால், மக்கள் கொடுத்திருக்கும் ஆணையாக நாம் ஏற்றுக் கொண்டு உள்ளூராட்சி சபைகளின் முழு அதிகாரங்களையும் உபயோகித்து மக்களுக்கு சேவையாற்றுவோம்’ என்று கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.