வடக்கு காவல் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்திய காவல்துறை!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வட மாகாணத்திலுள்ள சுமார் 10 பொலிஸ் நிலையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக இந்த தொலைபேசி அழைப்பின் போது எச்சரிக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 11 ஆம் திகதி பிற்பகல் இந்த தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த அநாமதேய தொலைபேசி அழைப்பு குறித்து பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன், நீதிமன்றத்துக்கும் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இதனிடையே வட மாகாணம் முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.