சனிக்கிழமை அமெரிக்காவில் விடிந்தால் ரம்பின் நாடுகளில் இறகுமதி வரிகள் அறிவித்தல்கள் காத்துக்கிடக்கின்றன.
10 நாளாக உள்நாட்டில் உருவாக்கிய குழப்பங்களில் இருந்து தற்காலிக விடுதலை எடுத்துக் கொண்டு உலகம் சுற்றுப் புறப்பட்டு விட்டார் ரம். இதற்குத் தயாராக வெள்ளி இரவே பங்குச் சந்தைகள் விழ ஆரம்பித்துள்ளன. சனி அறிவிப்பிற்குப் பின்னால் இன்னெரு காரணமும் இரருக்கிறது. முழுமையான பங்குச் சந்தை திங்கள் திரும்புவதற்குள் போதிய அவகாசம் வேறு உண்டு. தாக்கத்தைக் குறைக்கலாம் கூடவே மாற்றங்களுக்கும்…
சரி முதலில் என்ன வருகிறது. சீனாவிற்கு 10% வரி – கனடா – மெக்சிக்கோ 25% வரி. இது அனைத்துப் பொருட்களுக்குமா? தெரிவு செய்யப்பட்ட பொருட்களுக்கா? சனி காலை தெரிந்துவிடும். உலகமே! அடுத்த 4வருடமும் விரும்புகிறாயோ இல்லையோ நீ என்னை மட்டும் தான் பார்த்துக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்ற ரம்பின் பெரு விருப்பம் இரண்டாம் வாரத்திலும் தொடர்கிறது.
3 வரி விதிக்கப்படும் நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகம் என்ன?
இறக்குமதி – முழுமையான 2022 தரவுகளின் படி
- சீனா – 17.7% – 551 B
- கனடா – 14% – 438 B
- மெக்சிகோ – 13.5% 421 B
ஆக மொத்தம் அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில் 45.2 % இந்த மூன்று நாடுகளில் தங்கியிருக்கிறது. இந்த இறக்குமதிக்குத் தான் வரி. வழமையாக வரிகட்டுபவர் வாங்குகின்ற வர்த்தகம் தான். அவ்வர்தகம் விரும்பினால் வரிகட்டி பெற்று அதை பொருளின் விலையை ஏற்றி வாக்குபவரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இங்கு பாதிப்பு எங்கே அமெரிக்காவில். மறுபுறத்தில் வரி கட்டிப் பெற்று விற்க முடியவில்லை என வாங்குவதை அமேரிக்க வர்த்தகம் நிறுத்துகிறது. அது எனைய நாடுகளில் வேலை இழப்புகளுக்கும் தேசிய உற்பத்தியிலும் தாக்கத்தைச் செலுத்தும். போட்டியாக ஏனைய 3 நாடுகளும் அமெரிக்க இறக்குமதி கள் மீது வரி விதிக்க களம் ரணகளமாகும். இது வர்த்தகப் போர் எவ்வளவு நீடிக்கிறதோ. அது அவ்வளவு தூரம் உலகப் பொருளாதாரத்தைத் தாக்கும்.
வளர்ந்துவிட்ட நாடுகளின் தேசிய உற்பத்தி உள்ளூரில் பெருமளவிலும் வெளியூரை உள்ளடக்கியும் அமைந்திருக்கும். இவ்வாறு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பொருளாதாரத்தில் சடுதியாக எற்பாடின்றி கை வைப்பது மிகவும் ஆபத்தானது.
அமெர்க்க ஏற்றுமதி –
- கனடா – 15.8 %. 308 B
- மெக்சிகோ – 15.1 % 294 B
- சீனா – 7.71%. – 151 B
ஆக 38.61 %. அமெரிக்க ஏற்றுமதி இதே 3 நாடுகளுக்கு வேறு செல்கிறது. இடங்களை மாற்றிக் கொண்டாலும் ஏற்றுமதி இறக்குமதிகளில் அதே 3 நாடுகள். இதில் அதிகம் தனதாக்கிக் கொள்வது சீனா தான். ஆனால் அதற்கு10%தான் வரி. முதல் முறையும் மோதி மூக்குடைபட்ட அனுபவம் ரம்பிற்கு.
அதேவேளை ரம்பை எதிர்பார்த்து தயாராக காத்தகருக்கும் முதன்மை நாடும் சீனா தான். மேலும் வலியுடன் திருப்பி அடிக்க அது தயார் அது தான் அடக்கம்.
இவ்வாறான நடவடிக்கைகள் ரம் எதிர்பார்பது போல் பெரும் வேலை வாய்ப்புக்களை அமெரிக்காவில் உருவாக்குமா? பதில் 95% கிடையாது. அமெரிக்க பணவீக்கம் கட்டில் இருக்குமா? எகிறுவதற்கான வாய்ப்பே அதிகம். அதேவைளை அமெரிக்க பணவீக்கம் இன்னும் முழுமையான கட்டிற்குள் இல்லை.
என்ன அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் ஜப்பான் என தொடருமாம் ஜயா சொல்லிட்டார். Fasten your seat belts for fun-filled advenjourus wild ride…
Nehru Gunaratnam