இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காக கொழும்பு பாதுகாப்பு மாநாடு, கொழும்ப்பில் நேற்று நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் மொரீசியஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், துணை ஆலோசகர்கள் பங்கேற்றனர். வங்கதேசம் மற்றும் செஷல்ஸ் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
இதன் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கேவை சந்தித்து இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.