யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு தொகுதி காணிகள் இன்றைய தினம் (01) விடுவிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியினால் மாவட்ட செயலாளர் பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த யாழ் மாவட்ட செயலாளர், வலி வடக்கு வசாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணியும், மாங்கொல்லை பகுதியில் 15 ஏக்கர் காணியும், வடமராட்சி கற்கோவளம் பகுதியில் 5.7 ஏக்கர் காணியுமாக 40.7 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிiயில் குறித்த காணிகளில் வெடிபொருட்கள் அபாயம் தொடர்பில் நாளைய தினம் (02) ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அதன் பின்னர் குறித்த காணிகளை மக்களிடம் கையளிக்க முடியும் என்று யாழ் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் நாட்களில் மற்றுமொரு தொகுதி காணி விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



