உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபருக்கு அறிவித்தல் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நாட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள், அவர்களின் உயிரியல் அடிப்படையைப் பொருட்படுத்தாமல், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அறுவை சிகிச்சை மூலம் தங்கள் பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ள உதவும் முந்தைய மற்றும் தற்போதைய அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் சட்டவிரோதமானவை என்ற தீர்ப்பைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
இந்த மனுவை விமானப்படையின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் சாந்த ஜெயதிலக தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்களான, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற ஆயம் பரிசீலித்தது.
அதன்படி, குறித்த மனு ஜூலை 20ஆம் திகதி மீண்டும் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்து, ஒரு வாரத்திற்குள் பிரதிவாதிகளுக்கு அறிவிப்பு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டது.



