மைத்திரி கைது செய்யப்படுவாரா? சிறப்புரிமைகள் குறித்து சட்டமா அதிபா் திணைக்களம் ஆராய்வு

ஈஸ்டர் தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கூறிய கருத்துகள் அடிப்படையற்று அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக இருக்குமென நீதிமன்றில் கருதப்பட்டதால் அவர் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பிருப்பதாக நீதித்துறையின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிர்த்த ாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட மைத்ரி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஏற்கனவே வாக்குமூலம் வழங்கியுள்ளார். அந்த வாக்குமூலம் குறித்து எதிர்வரும் 4ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைகளின்போது, அவர் தவறான தகவல்களை வழங்கி அரசியல் நோக்கங்களுக்காக சமூகத்தில் பதற்றநிலையை உருவாக்கும் வகையில் அடிப்படையற்ற கருத்துகளைத் தெரிவித்திருந்தாரென நிரூபணமானால் அவர் கைதுசெய்யப்படும் வாய்ப்பிருப்பதாக மேற்படி நீதித்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் அவருக்குரிய சிறப்புரிமைகளைத் தாண்டி அவர் கைது செய்யப்பட்டால் அதன் சட்ட நியாயப்பாட்டை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதுபற்றி சட்ட மா அதிபர் திணைக்களம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அறியமுடிந்தது.