2006 ஆம் ஆண்டு திருகோணமயை மாத்திரமல்ல முழு உலகையும் உலுக்கிய படுகொலை.
மூதூர் பொது வைத்தியசாலைக்கு அருகில் இயங்கிவந்த பிரான்ஸ் தொண்டு நிறுவனமான (ஏ.சி.எப்.) அக்ஷன் பாம் எனும் சர்வதேச தொண்டர் நிறுவனத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்த 17 பணியாளர்களையும் ஆயுதம் தரித்த சீருடைக்காரர்கள் நிறுவன வளாகத்துக்குள் நுழைந்து, 2006 ஆகஸ்ட் 4ம் திகதி சுட்டு படுகொலை செய்தனர்.
இந்த சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளூர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டு, 19 வருடங்களாகியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.
உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு:
1. ரிச்சட் அருள்ராஜ் (வயது – 24) 2. முத்துலிங்கம் நர்மதன் (வயது – 23) 3. சக்திவேல் கோணேஸ்வரன் (வயது – 24) 4. துரைராஜா பிரதீபன் (வயது – 27) 5. சிவப்பிரகாசம் ரொமிலா (வயது – 25) 6. கணேஷ் கவிதா (வயது – 27) 7. எம். ரிஷிகேசன் (வயது – 24) 8. அம்பிகாவதி ஜெசீலன் (வயது – 27) 9. கனகரத்தினம் கோவர்த்தனி (வயது – 27) 10. வயிரமுத்து கோகிலவதனி (வயது – 29) 11. ஏ.எல்.மொகமட் ஜௌபர் (வயது – 31) 12. யோகராஜா கோடீஸ்வரன் (வயது – 30) 13. சிங்கராஜா பிறீமஸ் ஆனந்தராஜா (வயது – 32) 14. ஐ. முரளிதரன் (வயது – 33) 15. கணேஷ் ஸ்ரீதரன் (வயது – 36) 16. முத்துவிங்கம் கேதீஸ்வரன் (வயது – 36) 17. செல்லையா கணேஷ் (வயது – 54)
இதே ஆண்டு ஜனவரியில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்
ஊடகவியலாளர் கல்முனை சுகிர்தராஜனும் உட்துறைமுக வீதி எனும் பாதுகாப்பு வலயத்தில் வைத்து இதே ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இவ்வாறு இதே ஆண்டில் இலங்கை அரசால் திட்டமிட்ட பல படுகொலைகள் திருகோணமலையில் நடந்தன. ஆனால் அவற்றிற்கு அல்லது வடக்கு கிழக்கில் நடந்த எந்தவொரு படுகொலைகளுக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.