புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நோன்பு பெருநாள் திடல் தொழுகை முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதனை முள்ளிப்பொத்தானை புஹாரி ஜூம்மா பள்ளி நிர்வாகத்தினர ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த தொழுகையை உலமா சபையின் தம்பலகாமம் பிரதேச தலைவர் மௌலவி குசைன் மற்றும் மௌலவி முர்சித் ஆகியோர்கள் வழிநடாத்தினர்.சகோதரத்துவம் ஒற்றுமை போன்றன இதன் போது ஒவ்வொருவருக்குமிடையில் கைலாகு கொடுத்து முசாபகா செய்வதன் மூலம் வெளிப்படுத்தப்பட்ட இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆண்கள் என பலரும கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள்.