மீனவர் பிரச்னைக்கு பேச்சு மூலமாக தீர்வு – சாகல – சந்தோஷ் ஜா உயா்மட்டச் சந்திப்பில் முடிவு

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில் பேச்சுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவும் சந்தித்து கலந்துரையாடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபரகணங்களை பயன்படுத்தியும் இலங்கையின் கடல் எல் லைக்குள் அத்துமீறி நுழைந்தும் இந்திய மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர இதற்கு வடக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந் திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த 170 பேர் நீதிமன்ற உத்தரவில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மீன வர்கள் தமிழ்நாட்டில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

எனவே, தீவிரமடைந்து வரும் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போதே, இரு நாடுகளின் மீனவர் பிரச்னைக்கு நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய தீர்வு திட்டம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன், தீர்வுக்கான பேச்சுகளை உடன் ஆரம்பிக்கவும் இணக்கம் எட்டப்பட்டது.