மீண்டும் பரவும் கோவிட்-19 – எச்சரிக்கின்றது ஐ.நா

கோவிட்-19 வைரஸில் இருந்து பிறள்வடைந்த ஒமிகிரோன் என்ற வைரஸ் மீண்டும் பிறள்வடைந்து வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தள்ளது.

ஜே.என்-1 எனப்படும் இந்த வகை வைரஸ் இந்தியா> பிரித்தானிதானியா> சீனா> அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பரவிவருகின்றது. எனினும் அதன் ஆபத்துக்கள் குறைவாகவே உள்ளது. தற்போதைய தடுப்பு மருந்து அதற்கான பாதுகாப்பை வழங்கக்கூடியது.

எனினும் குளிர் காலத்தில் அது பரவும் விகிதம் மேலும் அதிகரிக்கலாம் என்பதே கவலைதருவதாக ஐ.நா மேலும் தெரிவித்துள்ளது. சுவாசத் தொகுதியை தாக்கும் வைரஸ், காச்சலை ஏற்படுத்தும் வைரஸ், நிமோனியா வைரஸ் ஆகியவையும் பரவும் ஆபத்துக்களும் உண்டு.

கொரோனோ வைரஸ் தொடர்ச்சியா பிறள்வடைந்து வருகின்றது. சில சமயங்களில் மிகவும் மோசமான வைரஸ் வகையை உருவாக்கலாம். இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து வருகின்றது.

தற்போதைய நிலையை கட்டுப்படுத்துவதற்கு நாம் முகக்கவசங்களை அணிவதுடன்> கைகளை கழுவுதல்> தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை இயன்றவரை கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா தெரிவித்துள்ளது.