வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள் ளலாரைப் போலவே, சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு தன்னுயிரை அர்ப்பணித்த முத்துக்குமாரும், அரிதினும் அரிதான மானுடன். உணர்ச்சி வசப்பட்டோ, அவசரப்பட்டோ அப்படியொரு முடிவை முத்துக்குமார் எடுத்துவிடவில்லை – என்பதில்தான். அந்த வீரத் தமிழ் மகனின் தனித்துவம் ஒளிர்கிறது.
உயிர் துறப்பதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் முத்துக்குமாரால் எழுதப்பட்ட மரண சாசனம், இறப்பை நோக்கி நகரும் தருவாயிலும், ஆழ்ந்து அறிந்த அரசியல் ஆய்வுத் திறனுடன். பொறுமையுடனும், பொறுப்புடனும் வரலாற்றைப் பதிவு செய்கிறது. எந்த இடத்திலும், வரம்பு களை மீறிவிடவில்லை. அதுதான் அந்த சாசனத்தின் சிறப்பம்சம்.
‘ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளை யன் கொன்று குவித்தான் என்றார்களே! இவர்கள் முல்லைத்தீவிலும், வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந் தைகளைப் பாருங்கள்; உங்கள் குழந் தைகள் நினை வுக்கு வரவில்லையா? கற் பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள்… உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கை யோ, அக்காவோ இல்லையா?.
முத்துக்குமாரின் மேற்கண்ட வாசகங் கள், எதிரிகளின் இதயத்தைக் கூட அடித்துத் தகர்க்கக் கூடியவை.
‘சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள். பாகிஸ்தானின் ஆர்டிலரி கள் மட்டுமல்ல… இப்போது எம் மக்களைக் கொலை செய்து வருவது சர்வதேச சமூகத்தின் மௌனமும்தான் என்பதை எப்போது உணர் வீர்கள்’ என்கிற முத்துக்குமாரின் கேள்வி, பல உலக நாடுகளின் முகத்திரையைக் கிழிக்கிறது. இப்போது கூட, இனப்படுகொலைக்கான நீதி தாமதமாவதற்கு சர்வதேச சமூகத்தின் மௌனம்தான் காரணமாயிருக்கிறது என்பதே யதார்த்தம்.
உணர்ச்சியும் அறிவும் ஒரே வேகத்தில் பயணிக்க முடியாது. ஒன்றை ஒன்று மிஞ்சப் பார்க்கும். இந்தப் பொதுவான நடைமுறைக்கு நேர்மாறானதாக இருந்தன முத்துக்குமாரின் வார்த்தைகள். அந்த இளைஞனால் அறிவோடு எழுதவும் முடிந்தது. உணர்ச்சியோடு இயங்கவும் முடிந்தது. அதுதான் முத்துக்குமார்.
தமிழின அழிப்புக்கு முடிவு கட்ட வேண்டுமென்றும், ராஜீவ் காந்தி படுகொலைக்கு பக்கச் சார்பற்ற நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும், சிங்களப் பத்திரிகையாளர் லசந்த கொலை தொடர்பாக நீதி விசாரணை தேவையென்றும் கோரியதன் மூலம், பல்வேறு எல்லைகளைத் தொட முடிந்தது, முத்துக்குமாரால்! இந்த பரந்து விரிந்த பார்வைதான். ஒட்டுமொத்தத் தமிழினத்தை யும் ஈர்த்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக. ஒரு ஆகப்பெரிய அர்ப்பணிப்புக்கு எந்தப் பதற்றமும் இல்லாமல் முத்துக்குமார் ஆயத்தமானது நம்மை வியக்க வைக்கிறது. தன்னுடைய மரண சாசனத்தை எழுதி முடித்த நிலையிலும், மிக மிக இயல்பாகவே இருந்திருக்கிறார் அவர்.
சென்னை கொளத்தூரில், தங்கை தமிழரசியின் வீட்டில் தங்கியிருந்த முத்துக்குமார். அங்கிருந்து சுமார் 8 மைல் தொலைவிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலகத் துக்கு நடந்தே போய் விடுபவர். அப்படியொரு அறிவுத் தேடல் அந்த இளைஞனுக்கு! ஜனவரி 28-ம் தேதி இரவு, உணவு பரிமாறுகிற தங்கையிடம். மறுநாள் காலையிலேயேதான் வெளியே போக வேண்டியிருப்பதால், காலை உணவு வேண்டாமென்று கூறி விடுகிறார். வழக்கம் போல அண் ணனுக்கு வெளியே ஏதாவது வேலையிருக்கக் கூடும் என்று நினைத்து விடுகிறாள் அந்தத் தங்கை. அதுதான் தன் அண்ணனுக்குத் தான் கொடுக்கிற கடைசி உணவு என்று. தமிழரசிக்கு அப்போது தெரியாது.
அதற்கு முந்தைய 48 மணி நேரத்தில், மரண சாசனத்தை எழுதி விடுகிறார். தீக்குளிப்பதற்கு முன் விநியோகிப்பதற்காக அதன் நகல்களை எடுத்து மறைத்து வைத்திருக்கிறார். தங்கைக்கு எந்த ஐயமும் ஏற்பட்டு விடாதபடி இயல்பாகப் பேசுகிறார். இயல்பாக உண்கிறார்.
இவை ஒருபுறமிருக்க. தீக்குளிப்பதற்குப் பயன் படுத்தப் போகிற மண்ணெண்ணையை, எவர் கண்ணிலும் பட்டுவிடாதபடி, வாங்கி மறைத்து வைத்திருக்கிறார். உடலில் மண்ணெண்ணையை ஊற்ற முயலும் போது. பாதி மேலேயும் பாதி கீழேயுமாக சிந்தி வீணாகி விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வுடன், அந்த மண்ணெண்ணை கேன்-ல் கூடுதலாக ஒரு ஓட்டை போட்டு வைத்திருக்கிறார்.
இவ்வளவும் செய்த முத்துக்குமார். சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில். தான் தீக்குளிக்கத் தேர்ந்தெடுத்த இடத்தை, முன்கூட்டியே. ஒருமுறைக்கு இருமுறை பார் வையிட்டிருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை. நிலை குலையாத ஒரு போராளி அப்படித்தான் இருப்பான்.
காலையில், அந்த வளாகத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் இருக்கும். எதிரேயுள்ள பேருந்து நிறுத்தத்தில். அருகாகை பெண்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் சங்கர நேத்ராலயா (கண் மருத்துவமனை) செல்வோரின் நடமாட்டம் இருக்கும். சாஸ்திரி பவனை ஒட்டியுள்ள நடைபாதைத் தேநீர்க் கடைகளில். வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். அத்தனைப் பேருக்கும் தன் மரண சாசன நகலைக் கொடுத்துவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தீக்குளித்து உயிர்துறப்பதென்று தீர்மானித்தவன், அந்தக் களத்தை ஒருமுறைக்கு இரு முறையாவது பார்வையிட்டிருக்கவேண்டும்.
பசிப்பிணியாற்றும் வடலூரின் அணையா நெருப்பைப் போலவே, தமிழராய்ப் பிறந்த நம் ஒவ்வொரு வரின் இதயத்திலும், தமிழ்மொழி காக்க நெருப்பில் கலந் தவர்களின் பெயர்களும், தமிழினம் காக்க நெருப்பில் கரைந்தவர்களின் பெயர்களும், பசுமரத்தாணி போல் பதிந்திருக்கின்றன. ஈழத்தில் நடக்கும் தமிழின அழிப்புக்கு எதிராக நெருப்போடு நெருப்பாய் கரைந்த தாய்த்தமிழ்நாட்டுத் தமிழர்கள் பட்டியல், அப்துல் ரவூஃப். முத்துக்குமார் என்று நீள்கிறது. ஈழத்தாய் மண்ணில், சிங்கள இன வெறியைத் தகர்த்துத் தமிழ் மக்களைக் காக்க நெருப்பாற்றில் நீந்தியவர்கள் பட்டியல், மில்லர், கயல் – என்று நீண்டு கொண்டே போகிறது.
நெல்லியடி முகாமைத் தகர்க்கத் தன்னைத்தானே வெடி மருந்தாக்கினான் மில்லர்… தமிழர்களுக்கு அச்சுறுத்தலாய் இருந்த கடல் அரக்கன் ‘அபித’வைச் சுக்கு நூறாக்கத் தன்னைத்தானே கண்ணி வெடி ஆக்கிக் கொண்டாள் அங்கயற்கண்ணி என்கிற எங்கள் கயல்… தங்களது இலக்குகளைத் தகர்ப்பதற்கு முன், கயலும் மில்லரும் எப்படியெல்லாம் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டார்கள் என்பதை நம்மால் மறக்கவே முடியாது.
நெல்லியடி முகாமைத் தகர்க்க தான் ஓட்டிச் செல்லப்போகும் ஜீப்பில் வெடிமருந்துகள் ஏற்றப்பட்டபோது. அந்தப்பணியில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மில்லர், வரலாற்றின் வார்த்தைகளில் தன் சவப்பெட்டியைத்தானே தயாரித்தவன்: தன் சவப்பெட்டிக்குத் தானே ஆணி அடித்துக் கொண்டவன்.
கயலும் அப்படித்தான்! பருத்தித்துறைக்கும். காங்கேசன் துறைக்கும் இடையேயான கடல்பகுதியில் மீண்டும் மீண்டும் நீந்திப்பார்த்து. இலக்கை நோக்கிய தன் பயணத்தைத் தீர்மானித்திருக்க வேண்டும். அத்தகைய ஆயத்தப்பணிகளால்தான். அபித என்கிற 6000 டன் கடல் அரக்கனை. ஐம்பது கிலோ எடைகூட இல்லாத கயலால். கண்ணிமைக்கும் நொடியில் சாம்பலாக்க முடிந்தது. இதெல்லாம் புராணம் – இதிகாசம் போல இட்டுக் கட்டப்பட்ட வெற்றுக் கதைகளல்ல. எங்கள் மில்லர்களும், எங்கள் கயல்களும், தங்கள் உயிரைக் கொடுத்து எழுதிய வலிமை மிக்க வரலாறு.
அந்த வரலாற்றின் தொடர்ச்சிதான். முத்துக்குமார். தன் இலக்கைத் தானே தீர்மானித்தான். தன்னைத்தானே ஆயத்தப்படுத்திக் கொண்டான். இனவெறியோடும். கொலை வெறியோடும் திரிந்த சிங்கள அரசுக்கு ஆயுதங்களைக் கொடுத்துதவிய இந்திய அரசின் மனச்சாட்சியை உலுக்க. இந்திய அரசின் அலுவலகங்கள் இருக்கும் சாஸ்திரி பவனைத் தனக்கான களமாக மாற்றினான். அந்தக் களத்தில், வெந்து தணிந்தது அந்த வீரத் தமிழ் மகனின் திருமேனி.
மில்லர் – கயல் முத்துக்குமார் என்கிற இந்த நெருப்பு மலர்களின் ஆயத்தப் பணிகள் மிக மிக முக்கியமானவை. நாம் பின்பற்ற வேண்டிவை. இனப்படுகொலைக்கு நீதி கேட்பது, பொதுவாக்கெடுப்புக்குக் குரல் கொடுப்பது உள்ளிட்ட கடமைகளை நிறைவேற்ற, நம்மை நாமே தயார்ப்படுத்திக் கொள்வது அவசியம். திட்டவட்டமான இலக்குகள், தெளிவான பாதைகள். பின்வாங்காத ஓர்மம்.. என்று நம்மை நாமே பட்டை தீட்டிக் கொள்வது மிகவும் முக்கியமானது.
மனு கொடுத்து மனு கொடுத்தே தேய்ந்து போய்விட்ட தமிழினத்தை, முத்துக்குமார் எள்ளி நகை யாடினான். நாம் மகஜர் கொடுக்கும் இனமாக மாறி விடலாகாது – என்று தெள்ளத் தெளிவாகக் கூறினான். முத்துக்குமார் என்கிற அந்த நெருப்புக் கனலின் கூற்றை, அவரது நினைவு நாளான ஜனவரி 29-ம் தேதியில் நினைவு கூர்வதோடு நின்றுவிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு களத்திலும் சமரசமில்லாமல் அதைக் கடைப்பிடிப்பதுதான். இன்றைய முதல் முக்கியத் தேவை.
2009 ஜனவரி 31-ந் தேதி நள்ளிரவில், மூன்று நாட்களுக்கு முன் தீப்பிழம்புகளுக்கு தன்னை இரையாக்கிக் கொண்ட முத்துக்குமாரை முழுமையாக நெருப்பிடம் ஒப்படைத்த கணத்தில். அந்த இறுதி நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்றிருந்த சகோதரர் வெள்ளையன் சொன்ன வார்த்தைகளை மறக்கவே முடியாது.
இறுதி நிகழ்வு நடந்த மூலக்கொத்தளம் பகுதி முழுக்க. முத்துக்குமாரை எரித்த சுடலையின் வெண்புகை பரவத் தொடங்கியது. ‘நாம் இப்போது முத்துக்குமாரை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார் வெள்ளையன். அப்போது மட்டுமல்ல. இப்போதும் அதுதான் உண்மை. நாம் முத்துக்குமாரை வாசிப்பதோடு நின்றுவிடவில்லை. வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரை சுவாசிக்கிறோம். அந்த சுவாசம். ஈழத்தாய் மண் தன் விடுதலையை சுவாசிக்க நிச்சயமாக வழிவகுக்கும். இந்த நம்பிக்கையோடு இலக்கு களைத் தீர்மானிப்போம். இனப்படுகொலைக்கு நீதியை யும். தமிழ் ஈழ விடுதலையையும் அடைவதற்கான ஆயத்தப் பணிகளை. முன்னெப்போதையும் காட்டிலும் பல மடங்கு தீவிரப்படுத்துவோம். முத்துக்குமார்களின் லட்சியத்தை, ஒன்றுவிடாமல் நிறைவேற்றுவோம்.



