இலங்கை மின்சார சபை பொறியாளர்களின் தொழிற்சங்க சங்கமானது இன்று (06) முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு, மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுக்கள் இன்று முதல் நிறுத்தப்படும் என செயற்குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேலும் கடுமையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.