மாகாண சபை தேர்தல் சட்டத்தை திருத்தும் சட்டமூலம் அடுத்த பாராளுமன்ற அமர்வில் முன்வைக்கப்படும்!

1988ஆம் ஆண்டு 02ஆம் இலக்க மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்தை திருத்துவதற்கான தனிநபர் பிரேரணை பாராளுமன்றில் அடுத்த அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த பிரேரணையை இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைக்கவுள்ளார். இது ஏற்கனவே வர்த்தமானியில் சட்டமூலமாக கடந்தவாரம் வெளியாக்கப்பட்டது.

தாமதமான மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள தடைகளை இந்த சட்டமூலம் நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.