மாகாண சபைகள் ஆளுநரின் ஆளுகைக்கு கீழ் இருப்பதற்கு மஹிந்த தேசப்பிரிய எதிர்ப்பு

மாகாண சபைகளை ஆளுநர்களில் ஆளுகையின் கீழ் கொண்டு செல்வது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனம் ஒன்றை நடத்தி செல்வதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என மாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்குத் தீர்ப்பின் போது உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் முறைமை தேவையில்லை என்றால் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்து 13ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும். எந்த அரசாங்கம் என்றாலும் தேர்தலை தள்ளிப் போடுவது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவுக்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது.
பாராளுமன்றத்தில் மாத்திரமே இந்த சிக்கலை நிவர்த்திக்க முடியும். மாத்திரமே இந்த சிக்கலை நிவர்த்திக்க முடியும்.

பழைய விகிதாசார முறையில் அல்லது கலப்பு முறையில் நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பழைய முறையில் தேர்தலை நடத்துவதென்றால் அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடத்தலாம்.
இரண்டும் கலந்த முறைமை என்றால் காலமெடுக்கும்.

எதிர்க்கட்சிகள் தங்களுக்கு ஆட்சி அதிகாரம் உள்ள உள்ளூராட்சி சபையில் கூட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு பிரேரணை ஒன்றையாவது கொண்டுவருவதில்லை. அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட உடன் பழைய முறைமையில் தேர்தலை நடத்தியிருந்தால், வெற்றி பெற்றிருக்கலாம்.
ஆனால் தற்போதைய நிலைமை பெரும் சிக்கல்களை தோற்றுவித்துள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.