மலை­யக தமிழ் குடும்­பங்­க­ளுக்கு சொந்த உறு­தி­யு டன் காணி,வீடு – முற்போக்கு கூட்­டணி 

மலை­யக சமூக மேம்­பாட்­டுக்­காக விசேட ஜனா­தி­பதி செய­லணி, மலை­யக தமிழ் குடும்­பங்­க­ளுக்கு சொந்த உறு­தி­யு டன்  7 பேர்ச்சஸ் காணியும், அதில் வீடும் வழங்­கப்­ப­டு­வதை உறுதிசெய்வோம். இந்த காணி வழங்­களில் காணப்­படும் அனைத்து நிர்­வாக தடை­களும் நீக்­கப்­படும். தோட்­டப்­ப­கு­தி­களில் 10 தேசிய பாட­சா­லைகள் அமைக்­கப்­படும்.

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான 1500  ரூபா சம்­பளம்  உட்­பட 10 விட­யங்கள் சஜித்பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் ஊடாக  மலை­யக மக்­க­ளுக்­காக பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தமிழ் முற்போக்கு கூட்­டணி  அறி­வித்­துள்­ளது.

இது  தொடர்பில் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி தெரி­வித்­துள்­ள­தா­வது,

அத்­துடன் உயர்­கல்­விக்­கான வாய்ப்பை மேம்­ப­டுத்த மலை­யக பல்­க­லைக்­க­ழகம்.உரு­வாக்­கப்­படும். தொழில் வல­யங்­களும், அவற்­றுடன் தொடர்­புற்ற  தொழிற்­ப­யிற்சி நிறு­வ­னங்­களும் தோட்ட பிர­தே­சங்­களில் இங்­குள்ள இளை­ஞர்­க­ளுக்­காக  அமைக்­கப்­படும்.

நாடெங்கும் கல்வி மற்றும் பயிற்சி நிறு ­வ­னங்­களில் மலை­யக தமி­ழர்­களின் பிர­தி ­நி­தித்­து­வத்தை அதி­க­ரிப்­ப­தற்­கான நன்­ னோக்கு எதிர்­மறை திட்டம்  நடை­மு­றை­ யாகும். நாட்டின் ஏனைய பிர­தேச சுகா­தார சேவைக்கு ஒப்­பான தர­மான சுகா­தார சேவையை தோட்­டப்­பு­றத்­திற்கும் பெற் றுத் தருவோம். தோட்­டத்­தொ­ழி­லா­ருக்கு  1500 ரூபா நாளாந்த சம்­பளம்.

“மலை­யக தமிழ் விவ­சாயி”களாக, நிலை ­யான வரு­மானம் பெற்­றுக்­கொள்வ­தற்காக,  தனியார், அரச பெருந்­தோட்டங்கள் மீள் கட்­ட­மைப்பு செய்­யப்­படும். இந்த மலை­யக விவசாயிகளிடமிருந்து விளை பொருட் களை விலைக்கு வாங்கி, தோட்ட நிறுவ னங்களும், இந்த  மலையக விவசாயிக ளும் பங்காளர்களாகும்  வெளிவாரி தொழில் முறைமை உத்தரவாதம் செய்யப்படும்.