மலையக அபிவிருத்திக்கு முன்னுதாரணம் மிக்க தலைவர் தேவை 

Unknown 2 மலையக அபிவிருத்திக்கு முன்னுதாரணம் மிக்க தலைவர் தேவை 

மலையகம் பல்வேறு வழி களிலும் இன்று தடம்புரண்டு போயுள்ள நிலையில் மக்களை ஐக்கியப்படுத்தவும், மலையகத்தை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லவும் முன்னுதாரணம் மிக்க தலைவர் ஒருவர் அவசியமாகும்.

அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் சமூகத்தைப் பற்றி சிந்திக்கின்ற தலைவர்களையே மக்கள் முதன்மைப்படுத்த வேண் டும் என்று பேராதனைப் பல்கலைக் கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.சோபனாதேவி தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக் கையில், மலையக மக்கள் இந் நாட்டிற்கு வருகைதந்து 200 வரு டங்கள் பூர்த்தியாகிவிட்டது. எனினும் அவர்கள் இன்னும் இந் நாட்டில் அபிவிருத்தி குன்றிய ஒரு சமூகமாகவே இருந்து வருவது வேதனையளிக்கின்றது. இந்நிலை யில் அவர்களின் தனித்துவத்தன்மை பேணப்பட்டு அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.எனினும் ஆட்சியில் அமரும் அரசாங்கங்கள் இது குறித்து சிந்தித்து செயற்படுவதாக இல்லை.பேரினவாத சக்திகளின் காய் நகர்த் தல்களுக்கு மத்தியில் ஒடுக்கப்பட்ட  ஒரு சமூகமாகவே மலையக மக்கள் இருந்து வருகின்றனர்.மலையக மக்கள் ‘இலங்கையர்’ என்ற பொது வரையறைக்குள் உள்ளீர்க்கப்படாது இன்னும் பல சந்தர்ப்பங்களில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே வழிநடத்தப்பட்டும் வருகின்றனர்.

மலையகம் பல்வேறு சவால்களையும் இப்போது சந்தித்து வருகின்றது.அரசியல், சமூகம், பொருளாதாரம் எனப்பலவும் இதில் உள்ளடங்கும்.இச்சவால்களை வெற்றி கொள் வதற்கு அர்ப்பணிப்பும் செயலாற்றலும் மிக்க தலைமைத்துவம் மிகவும் அவசியமாக வுள்ளது மலையகம் தடம்புரண்டு போயுள்ள நிலையில் மக்களை ஐக்கியப்படுத்தவும் மலையகத்தை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லவும் முன்னுதாரணம் மிக்க தலைவர் ஒருவர் அவசிய மாகும்.இத்தகைய ஒருவர் அரசியல் மற்றும் கட்சி பேதங்களுக்கு அப்பால் சமூகத்தின் எழுச்சி குறித்து சதா சிந்தித்து செயற்படுகின்ற ஒருவராக இருக்க வேண்டும்.தனி மனித குரோதங்கள், கட்சிப் பிரச்சினைகள்  செயற்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. இந்நிலையில் அரசியல்கட்சி பேதங்களுக்கு அப்பால் சமூகத்தைப் பற்றி சிந்திக்கின்ற தலைவர்களையே மக்கள் முதன் மைப்படுத்த வேண்டும்.

இதேவேளை தலைவர்கள் தூரநோக்கு மிக்கவர்களாக இருப்பதும் அவசியமாகும்.இந்த தூரநோக்கு தன்மையானது பின்தங்கிய சமூகங்கள் பலவற்றை முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளது.எனவே மலையக அரசியல்வாதிகள் காழ்ப்புணர்ச்சி, முறுகல் என்பவற்றுக்கு முற்றுப் புள்ளி வைத்து பொது இணக்கப்பாட்டின் அடிப் படையில் கைகோர்க்க வேண்டும் என்றார்.