இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனையை நேற்று பார்வையிட்டதன் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது ”இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது. எனவே இதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி அழித்தார்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள மந்திரிமனை இடிந்து விழுந்து பகுதியளவில் சேதம் அடைந்திருந்தது.
இதனை அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க ராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
அவர்களுடன் தொல்லியல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யு.ஏ பத்துல ஜீவ மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.