மட்டக்களப்பு பண்ணையாளருக்கு நீதி கோரி யாழில் இன்று போராட்டம்

VideoCapture 20240116 182931 மட்டக்களப்பு பண்ணையாளருக்கு நீதி கோரி யாழில் இன்று போராட்டம்மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் நல்லூர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது. தமிழர் ஒருங்கிணைந்த கட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இப்போராட்டத்தின் போது மேய்ச்சல் தரை தொடர்பான நீதிமன்ற சட்டத்தை உடனே நடைமுறைப்படுத்து, எமது பசுக்களை துன்புறுத்துவதையும், நிலங்களை ஆக்கிரமித்தலையும் உடனடியாக நிறுத்து, வாயில்லாத ஜீவன்களுக்கு வாயில் வெடிவைக்கும் கொடூரர்களை உடனடி கைது செய்.

மற்றும் பசுக்களைத் தெய்வமாக வழிபடும் நாங்கள் உணவின்றி பசுக்கள் படும் துன்பத்தை இனியும் சகியோம், மட்டக்களப்பு – மாதவனை, மயிலத்தமடு மேய்ச்சல் தரையை ஆக்கிரமிப்பதை உடனடியாக நிறுத்து, கிழக்கின் பொருளாதாரதை நசுக்காதே என்ற கோசங்கள் இதன்போது எழுப்பப்பட்டன.

VideoCapture 20240116 182847 மட்டக்களப்பு பண்ணையாளருக்கு நீதி கோரி யாழில் இன்று போராட்டம் 32 3 1 மட்டக்களப்பு பண்ணையாளருக்கு நீதி கோரி யாழில் இன்று போராட்டம்இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், சைவ மகா சபையினர், மத தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களால் இன்றையதின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபொரும் கவயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.