தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனின் சங்கு சின்னத்துக்கு ஆதரவாக பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பரப்புரை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மட்டகளப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் பொது அமைப்புகளை சேர்ந்தவர்களால் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட அம்பளாந்துறை, தளவாய் பகுதியில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை பரப்புரை கூட்டங்கள் நடாத்தியும் துண்டுபிரசுரங்களை வழங்கியும் தமிழ் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்துக்கு ஆதரவாக பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர்.





